மதுரை - சு வெங்கடேன்! திண்டுக்கல் - சச்சிதானந்தம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ள்ளது. இந்நிலையில் தான் அந்த வேட்பாளர்கள் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை என 2 லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் கோவை தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றார். அதேபோல் மரை தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் சு வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும் கடந்த முறையை போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை மதுரையுடன் கோவைக்கு பதில் திண்டுக்கல் தொகுதி அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இதன் ஒருபகுதியாக சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல் லோக்சபா தேர்தல்களில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் எளிதாக வெற்றி பெற முடியும் என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியாக மதுரை லோக்சபா தொகுதியில் மீண்டும் சு வெங்கடேசனை வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் தொகுதிக்கு அந்த மாவட்ட செயலாளர் சச்சிதானந்தத்தை வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேரின் பெயர்களும் வேட்பாளர்களாக இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛மதுரை தொகுதியியில் தற்போதைய எம்பி சு வெங்கடேஷ் மீண்டும் வேட்பாளராக அறுிவிக்கப்படுகிறார். திண்டுக்கல் தொகுதியின் வேட்பாளராக சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்’’ என கூறினார்.












Click it and Unblock the Notifications