சினிமா நண்பர்களை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை.. விஜய் எங்கே.. ஆளையே காணோமே.. ஓ இதுதான் மேட்டரா?
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு என்று கூறி அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் தற்போது சினிமா துறையே இந்த ரெய்டுகளால் அல்லோகலப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விவகாரங்கள் எதிலும் குரல் கொடுக்காமல் விஜய் அமைதியாக இருக்கிறார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றம் தடை
உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
சினிமாத்துறைக்கு சிக்கல்
இருப்பினும், முக்கியமாக சினிமாத்துறை இந்த ரெய்டுகள் காரணமாக கடுமையான விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோருக்கு ரொக்கமாக பெரிய தொகை கைமாறியதற்கான ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு பேருமே டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் இட்லி கடை மற்றும் பராசக்தி படங்களில் நடிக்கின்றனர்.
விஜய் எங்கே?
ஆனால் இந்த விவகாரங்கள் எதிலும் குரல் கொடுக்காமல் விஜய் அமைதியாக இருக்கிறார்.
1. ஒரு பக்கம் ஆளும் கட்சி அமைச்சர்கள், டாஸ்மாக் அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளாகி உள்ளது. அதை பற்றி விஜய் பேசவில்லை.
2. சக சினிமா நடிகர்கள்.. தனுஷ், சிவகார்த்திகேயன்.. அதிலும் தான் துப்பாக்கி கொடுத்த சிவகார்த்திகேயன் ஆகியோர் ரெய்டில் சிக்கும் சூழல் உள்ளது. அதை பற்றி விஜய் பேசவில்லை.
3. அமலாக்கத்துறை தாண்டி நிறைய விவகாரங்கள் நடந்து வருகின்றன.. உதாரணமாக அரக்கோணம் பெண் கொடுத்த பாலியல் புகார் வழக்கு தீவிரம் அடைந்து உள்ளது. அதை பற்றி விஜய் பேசவில்லை.
4. கட்சி சார்பாக ஆதவ் அர்ஜுனா வந்து ஏதேதோ பேசுகிறார் . ஆனால் விஜய் அமைதியாக இருக்கிறார்.
5. முன்பெல்லாம் அறிக்கையாவது விட்டு அறிக்கை அரசியல்வாதி என்று பெயர் எடுத்திருந்த விஜய்.. இப்போது அதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். சக சினிமா துறையினர் இதில் சிக்கி உள்ளதால் இந்த அமைதியா? அரசியல் ஆர்வமின்றி இந்த அமைதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு!












Click it and Unblock the Notifications