சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் விபத்தில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் மரணம்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் பேருந்து மோதி விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் கிண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி டி.என்.எச்.பி காலனியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் தர்ஷன் (19).

chennai accident

இவர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 16 ஆம் தேதி அய்யனாரப்பன், தனது மகன் தர்ஷனுடன் மோட்டார் சைக்கிளில் அசோக் நகர் நோக்கி சென்று கொம்டிருந்தார்.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்ற போது கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அருச மின்சார பேருந்து , இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தந்தை- மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் அய்யானரப்பன் குணமாகிவிட்டார். ஆனால் தர்ஷனுக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்ஷனுக்கு கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்ஷனின் மரணம் குறித்து அவரது உறவினர்கள் அளித்த பேட்டியில், ஆபரேஷன் நல்லபடியாகதான் நடந்து முடிந்தது. ஆனால் நுரையீரல் தொற்று காரணமாக தர்ஷன் உயிரிழந்து விட்டதாக தற்போது மருத்துவர்கள் கூறுவதாக வேதனை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+