Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive மீடியா பவர் தெரியல.. பக்குவம் இல்லாத அண்ணாமலை “அசிங்கமா போயிடும்” பத்திரிகையாளர் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பக்குவமற்ற தலைவராக இருக்கிறார், செய்தி ஊடகத்தின் வலிமை என்ன என்று அண்ணாமலைக்குத் தெரியவில்லை, செய்தியாளர்கள் குறுக்கு கேள்வி கேட்டால் பதற்றமடைந்து ஆவேசப்பட்டு விடுகிறார்" என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசி அடாவடியாக நடந்து கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு செய்தியாளர்கள் ஆதாரம் கேட்டால், செய்தியாளர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி, அவர்களை மிரட்டும் தொனியில் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் அண்ணாமலை.

ஏற்கனவே சில முறை பத்திரிகையாளர் சந்திப்புகளின்போதே செய்தியாளர்களை அவமதித்துப் பேசி சர்ச்சைக்குள்ளான நிலையில், மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பத்திரிகையாளர் சங்கத்தினர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாலும் அண்ணாமலை பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், பிரஸ் மீட்களில் அண்ணாமலை கோபப்படுவது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசுவது பற்றி பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:

 பின்னணி என்ன?

பின்னணி என்ன?

கேள்வி : அண்ணாமலை - பத்திரிகையாளர்கள் இடையேயான மோதல் முற்றி, அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் செய்தியாளர்களை அவமதித்துள்ளார். அண்ணாமலை vs பத்திரிகையாளர்கள் மோதல் பின்னணி என்ன?

பதில் : அண்ணாமலை பத்திரிகைத் துறையின் முக்கியத்துவத்தைப் புரியாத நபர் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ஏதாவது சாதனை செய்த சூழல்களில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருப்பார். அவை மென்மையாகவே இருக்கும். ஆனால், அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பு என்று வரும்போது அது கடுமையாகவே இருக்கும். பத்திரிகையாளர்கள் தன்னைக் கேள்வி கேட்பதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேமராக்களுக்கு பழகிய ரஜினிகாந்த், விஜய் போன்றோர் கூட பத்திரிகையாளர் சந்திப்பில் பதற்றமாகப் பேசியதைப் பார்த்துள்ளோம். அவர்கள் சீரியசான பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பழகவில்லை. என்னை எப்படி கேள்வி கேட்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அண்ணாமலையின் இந்தக் கோபம்.

 அண்னாமலையின் புது பாணி

அண்னாமலையின் புது பாணி

கேள்வி : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளான கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை கையாண்ட விதத்தைப் பார்த்துள்ள நமக்கு, அண்னாமலையின் இந்த பாணி புதிதாக இருக்கிறதே..?

பதில் : ஜெயலலிதாவிடம் சிக்கலான கேள்வியைக் கேட்கும்போது, நீங்கள் எந்த டிவி என்று கேட்டு அப்போ நீங்க இப்படித்தான் கேட்பீங்க என்று சொல்வது நடந்திருக்கிறது. கருணாநிதி, வைகோ, ராமதாஸும் இதேபோன்று நடந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலான தொலைக்காட்சிகள் கட்சி பின்புலத்தோடு இயங்குவதால் தான் இதுபோன்ற கேள்விகள் வருகின்றன. அவர்களின் கேள்வி, பேட்டி கொடுப்பவருக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனே இருப்பதால், அவர்களும் அப்படியாக செய்தியாளர்களை எதிர்கொள்கிறார்கள்.

 புரிதல் இல்லை

புரிதல் இல்லை

கேள்வி : டிஜிட்டல், யூடியூப் செய்தியாளர்கள் மீது அண்ணாமலை கடுமையாக எகிறி இருக்கிறார்.. 40 ஆயிரத்திற்கு கேமரா வைத்திருந்தால் கேள்வி கேட்பீர்களா, உங்களை யார் உள்ளே விட்டது எனக் கேட்டிருக்கிறார்.. அண்ணாமலைக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை?

பதில் : இன்றைக்கு மக்கள் மனதில் முடிவெடுக்கும் திறனை உருவாக்குவது டிஜிட்டல் ஊடகங்கள் தான். டிவி என்றால், அதனை முறைப்படுத்த கவுன்சில் இருக்கிறது, அதில் வரும் விளம்பரங்களை முறைப்படுத்தவும் கவுன்சில் இருக்கிறது. சேனலுக்கு ஆசிரியர், அதன் கீழ் பத்திரிகையாளர்கள் என முறையாகச் செயல்படுகிறார்கள். ஆனால், யூடியூப் அப்படி இல்லை, ஒரு ஆளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என கொஞ்சமும் புரிதல் இல்லாமல் பேசுகிறார் அண்ணாமலை. டிஜிட்டலில் தான் ஏராளமான நிபந்தனைகள் இருக்கின்றன. ஒரு வீடியோ எதைப் பற்றியது, அதில் வன்முறைக் காட்சிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்த்துத்தான் டிஜிட்டல் வீடியோ தளம் வீடியோக்களை ஏற்கிறது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் ஊடகங்களை முழுமையாக கண்காணித்து வருகிறது. ஆனால், அதுபற்றிய புரிதல் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்.

 பக்குவமற்ற தலைவர்

பக்குவமற்ற தலைவர்

கேள்வி : அண்ணாமலை டிஜிட்டல் ஊடகங்களில் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தாலும், டிஜிட்டல் ஊடக செய்தியாளர்களை துச்சமாக நினைக்கிறாரே?

பதில் : அண்ணாமலை ஃபேஸ்புக், ட்விட்டரை எல்லாம் தனது புரொமோஷனுக்கு வைத்துக் கொள்கிறார். ஆனால், கேள்வி கேட்கும்போது டிஜிட்டல் ஊடகத்தை விமர்சிக்கிறார். அண்ணாமலை ஒரு பக்குவமற்ற தலைவராகவே நடந்து கொள்கிறார். தலைமை செயலகம், நீதி மன்றம், காவல் ஆணைய அலுவலகங்களிலும் யூடியூப் சேனல்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அண்ணாமலையிடமும், "இவங்க யாரு.. சின்னப் பசங்கதானே.. நம்ம கிட்ட என்ன கேள்வி கேக்குறது?" என்ற எண்ணம் இருக்கிறது. நிறைய டிவி சேனல்களுக்கு பொலிட்டிகல் அஜெண்டா இருக்கிறது. ஆனால், யூடியூப் சேனல்களுக்கு அவ்வாறு இல்லை. அதனை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் அவர்களிடம் அதிகமாக சீறுகிறார்.

 கேள்வியை எதிர்கொள்ள ரெடியாக இல்லை

கேள்வியை எதிர்கொள்ள ரெடியாக இல்லை

கேள்வி : டிஜிட்டல் ஊடகங்கள் அண்ணாமலையை கோபப்படுத்தும் விதமாக கேள்வி கேட்பதால் சீற்றமடைகிறாரா?

பதில் : அண்ணாமலை முடிந்தால் என்னை புறக்கணியுங்கள், நானா உங்களை கூப்பிட்டேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பிலேயே சொல்கிறார். அனுபவமிக்க வெகுஜன ஊடக பத்திரிகையாளர்களிடமும் அண்ணாமலை அப்படித்தான் பேசுகிறார். அண்ணாமலை எந்த சிக்கலான கேள்வியையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 அசிங்கமா போயிடுமே

அசிங்கமா போயிடுமே

கேள்வி : உங்களை யார் செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்தது? வேண்டுமானால் புறக்கணியுங்கள் என வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார் அண்ணாமலை. ஆனால், தொடர்ந்து, அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்புக்கு வாட்ஸ்அப் குழுக்களில் அழைப்புகள் வருகின்றனவே?

பதில் : இது ஒரு கணவன் மனைவி சண்டை போலத்தான். அரசியல்வாதிக்கும் ஊடகத்திற்கும் இடையேயான தொடர்பு என்பது இணை பிரியாதது. விரும்பியோ விரும்பாமலோ இரு தரப்பும் இணைந்தே செயல்பட்டாக வேண்டும். அரசியல்வாதியின் கருத்துகளைக் கொண்டு செல்ல ஊடகங்கள் தேவை, அதேபோல செய்தி நிறுவனங்களுக்கு அரசியல்வாதி தேவை. அண்ணாமலை ‘பாய்காட் பண்ணுங்க' எனச் சொல்லி வரும் நிலையில், ஒருநாள் நிஜமாகவே பத்திரிகைகள் புறக்கணித்து விட்டால் என்ன செய்வார் அண்ணாமலை? அசிங்கமாகி விடாதா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+