காரணமே வேற.. திடீரென கேன்சல் ஆன முதல்வர் ஸ்டாலினின் பயணம்.. மலைத்து பார்க்கும் "மேலிடம்"
ஸ்டாலினின் லண்டன் பயணம் திடீரென ரத்தாகி உள்ளது
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணம் திடீரென ரத்தாகி உள்ளது.. இதற்கான காரணமும் வெளியாகி உள்ளது.
192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி வரும் 26, 27 ஆம் தேதிகளில் துபாயில் நடக்க போகிறது.. இதில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, தமிழகத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி
இந்த கண்காட்சி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.. அதனால், இந்த கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.. இதற்கான ஏற்பாடுகளையும், ஒரு மாதத்துக்கு மருமகன் சபரீசன் செய்து முடித்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது திடீரென மற்றொரு தகவல் வெளியானது.. அதன்படி, துபாய் பயணத்தை தொடர்ந்து ஸ்டாலின் அப்படியே லண்டனுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது..

கோலாகலம்
காரணம், சில நாட்கள் ஓய்வெடுத்து கொள்வதற்காகவும், உடல் பரிசோதனைக்காகவும் அடிக்கடி லண்டனுக்கு ஸ்டாலின் செல்வது வழக்கம். கடந்த முறை சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பிறகும் அப்படித்தான் கூறப்பட்டது.. லண்டனுக்கு சென்று வந்த பிறகு பதவியேற்பு விழாவை வைத்து கொள்ளலாம் என்று முடிவும் செய்யப்பட்டது.. ஆனால், பல்வேறு நாடுகளில் தொற்று அதிகம் இருந்த காரணத்தினால், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது..

ஸ்டாலின் வருகை
அதனால் முதல்வர் தன்னுடைய குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு மட்டுமே சென்று வந்தார்.. இந்நிலையில்தான் லண்டனுக்கு செல்லப்போவதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. அவரது இந்த பயணத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த முறையும் லண்டன் பயணம் கேன்சல் ஆகிவிட்டது என்கிறார்கள்.. முதல்வர் லண்டனுக்கு செல்லும் திட்டம் இல்லையாம்.. துபாய் பயணம் முடிந்து உடனே சென்னை திரும்புகிறார்..

திமுக அலுவலகம்
இதற்கு காரணம் ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா நடக்க உள்ளது.. இந்த விழா குறித்த பணிகளில் ஈடுபட உள்ளார் முதல்வர்.. இதை ஒரு சாதாரண விழாவாக நடத்திவிடாமல், இந்த விழாவை தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்கும் வகையில் மாற்றியமைக்க ஸ்டாலின் விரும்புகிறார். இதற்காக, பாஜகவுக்கு எதிராக உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அவர்களை அழைத்து வரும் பொறுப்பினை டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது..

கோலாகலம்
அவர்களும் தலைவர்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். அவர்களின் சம்மதம் கிடைக்கப்பெற்றதும் அழைப்பிதழ் அச்சிடுவது துவங்கும் என தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கும் மத்திய அரசுக்கு பதிலடி தரும் வகையில் டெல்லி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது...

முதல் பயணம்
விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா களமிறங்கி உள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த லண்டன் பயண ரத்து அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை பெறும் என்று தெரிகிறது... முதல்வரின் இந்த துபாய் பயணத்தில் அவரோடு துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் செல்கிறார்கள்.. முதல்வரான பிறகு ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் தலைவர்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். அவர்களின் சம்மதம் கிடைக்கப்பெற்றதும் அழைப்பிதழ் அச்சிடுவது துவங்கும் என தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கும் மத்திய அரசுக்கு பதிலடி தரும் வகையில் டெல்லி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது...












Click it and Unblock the Notifications