வெறும் 2 நாள் தானே இருக்கு! பட்டென கேப்டன் பொறுப்பை துறந்த தோனி! ஜடேஜாவிடம் தந்தது ஏன்? என்ன காரணம்?
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.
Recommended Video
2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை மொத்தம் 10 அணிகள் ஆட உள்ளதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
சிஎஸ்கே, கொல்கத்தா இடையிலான போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. முதல் போட்டியே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடருக்கு 2 நாள்
சரியாக முதல் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை தோனி ராஜினாமா செய்துள்ளார். புதிய கேப்டனாக மூத்த வீரர் ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு சிஎஸ்கே ரசிகர்கள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்கும் முடிவாக அமைந்துள்ளது. ஆனாலும் கூட பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது எதிர்பார்த்த முடிவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜாவிற்கு சிக்னல்
முன்னே ஜடேஜாவை முதல் ரீ டெயின் ஆப்ஷனாக சிஎஸ்கே எடுத்து இருந்தது. 4 பேரில் தோனிதான் முதல் ரீ டெயின் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜடேஜாதான் முதல் ஆளாக ரீ டெயின் செய்யப்பட்டார். ஜடேஜாவிற்கு 16 கோடி ரூபாயும், தோனிக்கு 12 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டது. அப்போதே தோனி கேப்டன் இல்லையா என்ற விவாதங்கள் எழுந்தன. அதோடு ஜடேஜாவை அதிக விலையில் எடுங்கள் என்று தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறியதாகவும் தகவல் வந்தன.

முன்பே முடிவு
எனவே இது முன்பே எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் கடந்த சீசனில் தோனி கோப்பை வென்றுவிட்டார். எனவே கோப்பையோடு அவர் கேப்டன்சியில் இருந்து ஓய்வு பெறுவதே சரியானதாக இருக்கும். அதோடு பெரிய ஏலம் நடந்து முடிந்துவிட்டது. இனி சிஎஸ்கே அணியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தயார் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றபடி திட்டங்களை போட வேண்டும். இதை கருத்தில் கொண்டே இளம் வீரரான ஜடேஜா கேப்டன் ஆக்கப்பட்டு உள்ளார்.

ஸ்மூத் மாற்றம்
அதோடு கேப்டன் திடீரென அணியில் இருந்து ஓய்வு பெற்றபின் புதிய கேப்டனை போடாமல், கேப்டன் இருக்கிற போதே புதிய கேப்டனை கொண்டு வந்து, அவருக்கு பயிற்சியை அளிப்பதே சிறப்பாக இருக்கும். இந்த சீசன் அல்லது, அடுத்த சீசன் தோனி ஆடும் கடைசி சீசனாக இருக்கும் பட்சத்தில் ஜடேஜாவிற்கு தோனி ஆலோசனை வழங்க முடியும். கேப்டனாக ஜடேஜாவை தோனி மெருகேற்ற முடியும். இது நலன் ஸ்மூத் மாற்றத்தை அணியில் ஏற்படுத்தும்.

பயிற்சி அளிக்கலாம்
இதுவே கேப்டன்சி மாற்றத்திற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவை தோனி மற்றும் அணி நிர்வாகம் எதிர்காலத்திற்கு தயார் செய்வதே இதற்கான காரணம். ஜடேஜாவிற்கு இது நல்ல பயிற்சியாக இருக்கும் என்பதால் தோனியின் இந்த முடிவு சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. அதோடு வெளியில் இருந்து கேப்டனுக்காக ஒருவரை கொண்டு வராமல் உள்ளே இருந்தே ஒரு வீரரை கேப்டனாக்கியது சிறப்பான முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

தனிப்பட்ட முடிவு
அணியில் உள்ள மற்ற இளம் வீரர்களுக்கும் இது உத்வேகத்தை கொடுக்கும். அதோடு இது தோனியின் தனிப்பட்ட முடிவு என்றே கருதப்படுகிறது. அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கும் எந்த எண்ணமும் அணி நிர்வாகத்திற்கு இல்லை. இந்த நிலையில்தான் சிஎஸ்கேவின் எதிர்காலம் கருதி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இத்தனை நாட்கள் டாடி அணியாக இருந்த சிஎஸ்கே சில இளம் வீரர்களுடன், இளம் கேப்டனுடன் புது பொலிவுடன் இந்த முறை களமிறங்குகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications