Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்காலத்திற்கே சிக்கல்.. தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது எப்படி? ஜடேஜா விலகியது ஏன்? 3 பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருத்தி மூட்டை இதுக்கு குடோன்லயே இருந்திருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த முடிவிற்கு பின் 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

    தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அழுத்தம்.. Dhoni மீண்டும் CSK Captain ஆக பதவியேற்றது ஏன்?

    இந்த 2022 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன் திடீரென கேப்டன் பதவியில் இருந்து தோனி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட படியே ஜடேஜா கேப்டன் ஆனார்.

    அதை மனதில் வைத்தே ஜடேஜாவை முதல் ரீ டெயின் ஆப்ஷனாக சிஎஸ்கே அணி எடுத்து இருந்தது. ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சி பெரிதாக ஈர்க்கவில்லை.

    எதிர்காலம் கருதி

    எதிர்காலம் கருதி

    சிஎஸ்கே அணியின் எதிர்காலம் கருதியே ஜடேஜா கேப்டனாக்கப்பட்டார். ஜடேஜா கேப்டன் ஆனால்... இன்னும் 5 வருடங்களுக்கு அவர் கேப்டனாக இருக்கலாம் என்றே கருத்துக்கள் வைக்கப்பட்டன. ஆனால் சிஎஸ்கே அணி ஜடேஜாவை விட தோனிதான் அதிகமாக ஷேடோ கேப்டன்சி செய்தார். இருந்தாலும் அணி தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் ஜடேஜாவிற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு இது உதவவில்லை.

    ஷேடோ கேப்டன்

    ஷேடோ கேப்டன்

    ஜடேஜாவின் கேப்டன்சியின் கீழ் சிஎஸ்கே வரிசையாக அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வி அடைந்தது. 8 போட்டிகளில் ஆடி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றது. வரிசையாக 6 போட்டிகளில் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஜடேஜாவின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

    விலகல்

    விலகல்

    இந்த நிலையில் பலர் தோனி மீண்டும் கேப்டன் ஆக வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்தனர். அப்போதுதான் சிஎஸ்கே அணி மீண்டும் பார்மிற்கு திரும்பும் என்றனர். அதன்படியே தற்போது தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆகி உள்ளார். கேப்டன்சியில் இருந்து ஜடேஜா பதவி விலகி உள்ளார். நேற்று ஜடேஜா தனது பதவியை துறப்பதாக அறிவித்தார். இந்த முடிவிற்கு பின் 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    காரணம் 1 - தலைமை பண்பு

    காரணம் 1 - தலைமை பண்பு

    முதல் விஷயம்.. ஜடேஜாவிடம் தலைமை பண்பு இல்லை. இது அவருக்குமே தெரியும். முன்பு வெளிநாட்டு தொடர் ஒன்று முடிந்த பின் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியும் இதை பற்றி சொல்லி இருக்கிறார். அண்டர் 19ல் கேப்டனாக இருந்தாலும் ஜடேஜா சிஎஸ்கேவில் அவ்வளவு சிறப்பாக கேப்டன்சி செய்யவில்லை. இப்போது தோனி அவருக்கு அறிவுரை சொல்கிறார்.. ஆனால் தோனி சென்ற பின் அவர் அதிகம் கஷ்டப்படுவார். இது சிஎஸ்கே எதிர்காலத்திற்கே சிக்கல் என்பதால்.. ஜடேஜாவே பதவி விலகி இருக்கிறார்.

    காரணம் 2 - பேட்டிங்

    காரணம் 2 - பேட்டிங்

    இன்னொரு பக்கம் ஜடேஜாவின் பேட்டிங் மோசமாகிவிட்டது. கடந்த இரண்டு வருடமாக அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். இப்போது கேப்டன்சி வந்ததும் அவர் பேட்டிங் சொதப்பிவிட்டது. அதேபோல் பீல்டிங்கிலும் அடிக்கடி கேட்ச் விட்டார். காரணம் கேப்டன்சி பிரஷர். சிஎஸ்கேவிற்கு கேப்டன் ஜடேஜாவை விட பேட்ஸ்மேன் ஜடேஜாதான் தேவை. இதை உணர்ந்து அவரே தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

    காரணம் 3 - இந்திய அணி எதிர்காலம்

    காரணம் 3 - இந்திய அணி எதிர்காலம்

    மூன்றாவது விஷயம்.. இந்திய அணியின் எதிர்காலம். இந்திய அணியில் ஜடேஜா நீடிக்க வேண்டும். அவர் இப்போதும் இந்திய அணிக்கு தேவையாக இருக்கிறார். அதற்கு அவர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் பார்மில் அவரால் இந்திய அணியில் சரியாக ஆட முடியாது. எனவே பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக ஜடேஜா கேப்டன்சியை துறந்ததாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+