• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்த 3 வார்த்தை".. கவனிச்சீங்களா, மோடியை வைத்துக் கொண்டே கெத்து காட்டிய முதல்வர்.. டென்ஷனில் பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு, பாஜகவுக்கு எரிச்சலூட்டி வருகிறது.

நேற்றைய தினம் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, நேரு விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

பிரதமரை வரவேற்க கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது.. இதற்கான நடனகலைஞர்களும், தாரை தம்பட்டம், செண்டை மேளம் என இசைக் கலைஞர்களும் குழுமியிருந்தனர்..

சிலையாக வழிநடத்தும் தலைவர் கருணாநிதி! சிலை திறப்பு தித்திப்பான நாள்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்! சிலையாக வழிநடத்தும் தலைவர் கருணாநிதி! சிலை திறப்பு தித்திப்பான நாள்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

 காவி மயம்

காவி மயம்

ஆனால், மோடியை உற்சாகமாக வரவேற்க குவிந்திருந்த நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களில் பெரும்பாலோர் காவி உடை அணிந்திருந்தனர்.... அதேபோல, அங்கு வந்திருந்த சிறுவர்களும் காவி துண்டு, வெள்ளை வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம் என்று காவிமயமாக காட்சியளித்தனர்... எல்லாவற்றிற்கும் மேலாக, சிவலிங்கம், பசு மாடு போன்ற ஓவியங்களும் இணைந்து காவிமயமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம்

சம்பவம்

இந்த விழாவில் பெரிதளவு பேசப்பட்டது திராவிட மாடல் என்ற வாசகம்தான்.. முதல்வர் பேசும்போது, "இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம், மருத்துவம், ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது... இந்திய நாட்டின் வளர்ச்சிவில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது அந்த வளர்ச்சி வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்றார்.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

பிரதமரை மேடையில் வைத்து கொண்டு, முதல்வர் சொன்ன திராவிட மாடல்தான் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. ஆனால் தமிழக பாஜக கடுப்பாகி உள்ளது.. குறிப்பாக துணை தலைவர் திருப்பதி நாராயணன் இதுகுறித்து ட்வீட் மேல போட்டுள்ளார்.. அதில், "குடியை கொடுத்து, குடியை கெடுத்ததுதான் திராவிட மாடல் என்றும், அப்போது கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, இபபோது அதை மீட்க வேண்டும் என கூக்குரலிடுவதுதான் திராவிட மாடலா? என்றும், ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என்று பலமுறை கூறி புளகாங்கிதம் அடைந்தது குன்றிய அரசு' என்றும் பதிவிட்டுள்ளார்.

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அதாவது நாராயணன் குறிப்பிட்டுள்ள திராவிட மாடல், கச்சத்தீவு, ஒன்றிய அரசு போன்ற 3 வார்த்தைகளுமே நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய உரையில் குறிப்பிட்ட வார்த்தைகளாகும்.. இதற்கு பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. மோடி கூட பேசும் போது Union Government என்று சொன்னாரே, காதில் விழவில்லையா? என்று சிலர் கேட்டுள்ளனர். கச்சத்தீவு குறித்து, திமுகவுக்கு மோடி பதிலடி தரவில்லையே ஏன்? என்றும் சிலர் கேட்டுள்ளனர். திராவிட மாடல் என்றால் என்ன? எம்ஜிஆர் கூட திராவிட கட்சிதானே? அவங்களுடன்தானே கூட்டணி வைத்திருக்கீங்க என்றும் சிலர் கேட்டு வருகின்றனர்.

English summary
why did mk stalin say three word in modi meeting and tn BJP tirupati narayanan tweeted about it திராவிட மாடல் என்று முதல்வர் பேசியதை தமிழக பாஜக விமர்சித்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X