சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வழக்கையே புரட்டி போடும்? ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 5 வருஷம் இருக்கே.. எடப்பாடிக்கு நீதிபதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் இருக்கிறதே? அதற்கு முன் எப்படி பதவிகாலம் முடிவிற்கு வந்தது ? என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியது.

Recommended Video

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இன்று அனைத்து வாதங்களும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்..

    வழக்கு விசாரணை

    வழக்கு விசாரணை

    இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மட்டும்தான் கூட்ட முடியும். ஆனால் அவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே தலைமை கழக செயலாளர் மற்றும் பொருளாளர் கூட்ட முடியும்.ஆனால் பொதுக்குழுவில் பதவிகள் அங்கீகரிக்கப்படாத காரணத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகின்றன என்று வாதம் வைக்க முடியாது. இந்த பதவிகள் இன்னும் காலாவதியாகவில்லை.

    5 ஆண்டுகள் பதவி

    5 ஆண்டுகள் பதவி

    5 ஆண்டுகள் இவர்களுக்கு பதவிக்காலம் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று கூறினால் மொத்தமாக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் காலாவதியாகிவிடும். பொதுக்குழுவே செல்லாதாகிவிடும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. இதையடுத்து பொதுக்குழுவில் அங்கீகரிக்கவில்லை என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிடுமா? இது பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி நேற்று கேள்வி எழுப்பினார்.

    மீண்டும் எடப்பாடி பழனிசாமி

    மீண்டும் எடப்பாடி பழனிசாமி

    இன்று மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் இருக்கிறதே? அதற்கு முன் எப்படி பதவிகாலம் முடிவிற்கு வந்தது? இந்த பதவி நீக்கப்பட்டது எப்படி என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதனால் இந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது.

    வாதம் என்ன?

    வாதம் என்ன?

    அதே சமயம் பொது 2017ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்வு செய்யப்பட்டதை அடிப்படையாக இங்கே எடுத்துக்கொள்ள முடியாது. அதோடு பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி காலாவதியாகும் என்றும் வாதம் வைக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்ட திருத்தம் ஆகும். அதை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதனால் அவை காலாவதியாகிவிட்டது

    காலாவதியாகிவிடும்

    காலாவதியாகிவிடும்

    ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி இப்படி காலாவதியாகாது. எனவே பொதுக்குழு செல்லும். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. 2432 பேர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதோடு இவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். அதனால் இந்த தேர்வு சரியானதே என்று வாதம் வைக்கப்பட்டது.

    English summary
    Why did you abolish the chief conveyor post in AIADMK? MHC ask Edappadi Palanisamyஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் இருக்கிறதே? அதற்கு முன் எப்படி பதவிகாலம் முடிவிற்கு வந்தது ? என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X