காயத்ரி + சூர்யா + டெய்சி.. டென்சன் ஆன "மேலிடம்".. உடனே டெல்லிக்கு பறந்த அண்ணாமலை.. ஆஹா என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்த நிலையில் அவர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென நேற்று காலை ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார். தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை புகார் கொடுத்ததாக என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
சட்ட ஒழுங்கில் குறைபாடு இருப்பதாக அண்ணாமலை ரிப்போர்ட் ஒன்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பல்வேறு மசோதாக்கள் பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
ட்ரிபிள் “அ”.. ஆன்லைன் ரம்மி + ஆளுநர் + அண்ணாமலை! லிங்க் இருக்குமோ? காங்கிரஸ் எம்பிக்கு வந்த டவுட்டு

உட்கட்சி மோதல்
அதே சமயம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவில் தற்போது உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. சமூக வலைத்தளங்களில் மாறி மாறி மோதிக்கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவில் சுனாமி போல புயலை கிளப்பி இருக்கிறது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட விவகாரமும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரமும். இது தொடர்பான புகார்கள் பாஜக மேலிடத்திற்கும் சென்றுள்ளது. இந்த விஷயமும் டெல்லிக்கு தெரிந்து கண்டித்து இருக்கிறதாம். தமிழ்நாடு பாஜக மீது டெல்லி அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று நடந்த மீட்டிங்கில் அந்த விவகாரம் பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

அப்செட்
ஏன் தமிழ்நாடு பாஜகவில் இது போன்ற புகார்கள் எழுகின்றன என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். சமீபத்தில் கே டி ராகவன் இதேபோல் சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் சசிகலா புஷ்பாவை பொது இடத்தில் பாஜக நிர்வாகி தவறாக சீண்டியதாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருச்சி சூர்யா பாஜக நிர்வாகி டெய்சியை தவறாக பேசி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இப்படி பாஜகவில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள்தான் டெல்லி தரப்பை அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை பாஜக தலைவராக பதவி ஏற்ற பின்பே இந்த புகார்கள் அனைத்தும் வைக்கப்பட்டன.

புகார்கள்
தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பற்றி பற்றி தலைமையிடம் பேசுவேன் என்று காயத்ரி குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், தேசிய தலைமையிடம் இதை பற்றி பேசுவேன். இதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு இருக்கிறேன், என்றார். அதோடு நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு காயத்ரி அனுப்பிய அறிக்கையில், நான் சில நேர்காணல்களைப் பார்த்தேன். நான் திருச்சி சூரியா ஆடியோவை கசியவிட்டதாக மக்களிடம் என்னை கட்டமைக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லச் சொன்னார்களா அல்லது வதந்திகளை நம்புகிறார்களா அல்லது வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் முதலில் உரையாடலைப் பதிவு செய்தவர் நான் அல்ல. அதே போல் முதலில் இந்த ஆடியோவை மாநில அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நான் கொடுக்கவில்லை. பிரபல ஊடகவியலாளர் ஒருவர் இந்த ஆடியோவை வெகு காலத்திற்கு முன்பே பெற்று உரையாடலைக் கேட்டார் என்று அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவும் கூறினார்.

அறிக்கை
மீடியாவுக்கு ஆடியோவை யார் கொடுத்தார்கள் என்பதை அண்ணாமலை ஜி கண்டுபிடிப்பது எளிது. சில பிரபல அரசியல் விமர்சகர்கள் இந்த குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகின்றனர், அதற்காக பாஜக மாநில தலைவரிடம் புகார் அளித்துள்ளேன். திருச்சி சூரியா ஆடியோவை மீடியாக்களுக்கு கசியவிட்டது யார் என்பதைக் கண்டுபிடித்து அந்த நபர் மீது மாநில தலைவர் திரு. கே.அண்ணாமலை ஜி நடவடிக்கை எடுப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.. உண்மைக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உணர்வுபூர்வமாக ஆதரவளித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, மற்றும் தமிழ்நாடு மக்களின் அதீத அன்பிற்கு நான் தலைவணங்குகிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த சர்ச்சைக்கு இடையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்த நிலையில் அவர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

ஏன் பயணம்
இந்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்தான் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். பிரதமர் வருகையில் பாதுகாப்பு குறைபாடு என ஆளுநரை சந்தித்து நேற்று புகார் அளித்த நிலையில் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள அவர் செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென ஏன் இப்படி செல்கிறார். இதற்கு முன் மற்ற மாநில பிரச்சாரங்களில் அண்ணாமலை பெரிதாக ஆர்வம் காட்டியது இல்லையே. இப்போது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பயணத்திற்கு பிரச்சாரம் மட்டும் காரணம் இல்லை. அவர் பாஜக தேசிய தலைவர்களை சந்திப்பார். அவர்களிடம் பாஜகவில் நடக்கும் விஷயங்கள் பற்றி விளக்குவார். அதற்காகவே இந்த பயணத்தை மேற்கொள்கிறார். முக்கியமான சில மீட்டிங்குகள் டெல்லியில் நடக்க உள்ளன என்று குறிப்பிட்டு உள்ளனர் விவரம் அறிந்தவர்கள்.