கவனமாக இருங்க.. உங்களைத்தான் குறி வைப்பாங்க.. டெல்லி போடும் ஸ்கெட்ச்.. ஸ்டாலின் அனுப்பிய வார்னிங்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இடையில் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் விடுத்து இருக்கிறாராம். சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறாராம்.
தினமும் பிரச்சாரத்திற்கு இடையே நேரம் கிடைக்கும் போதே மா.செ.க்களுடன் காணொலி காட்சி வழியாக தேர்தல் தொடர்பாக விவாதிக்கவிருக்கிறார். அப்போது, வேட்பாளர்கள் பிரச்சாரம் குறித்தும் தேர்தல் களநிலவரம் குறித்தும் மா.செ.க்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார் ஸ்டாலின்.

மேலும், நம் வேட்பாளர்களை மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்றும், ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தால் ஏற்கனவே எச்சரித்தபடி பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் மீண்டும் மா.செ க்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயத்தினர்
ஸ்டாலினுக்கு செல்லும் தகவல்: தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடை வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.
தனது கவனத்துக்கு வந்ததுமே, அன்றைய தினம் இரவு சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார். எச்சரிக்கை செய்ய வேண்டியவர்களுக்கு எச்சரிக்கையும், கண்டிக்க வேண்டியவர்களுக்கு கண்டிப்பும், கனிவாக பேசப்பட வேண்டியவர்களிடம் கனிவாகவும் என பல்வேறு நவரச முகங்களைக் காட்டுகிறார் ஸ்டாலின்.
புகார்: லோக்சபா தேர்தல் பணிகளுக்கு இடையில் திமுக நிர்வாகிகள் சிலருக்கும் அமைச்சர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளாராம்.
லோக்சபா தேர்தல் நேரம் என்பதால் கவனமாக இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
நம்முடைய பொருளாதாரத்தை உடைக்க பார்ப்பார்கள். நமக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயம் இருக்க கூடாது. இருந்தாலும் எதற்கும் கவனமாக இருங்கள். சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள். கட்சிக்கு நிதி கொடுக்க தயாராகி இருப்பவர்களை இவர்கள் தூக்க பார்ப்பார்கள். அதற்கு விட்டுவிடாதீர்கள்.
எனக்கு இது தொடர்பாக இரவில் அடிக்கடி முக்கிய தகவல்கள் வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் ரெய்டை எதிர்பாருங்கள். சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக மேலே தகவல் அனுப்புகிறார்கள். நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள். மாநில அதிகாரத்தில் இருக்கும் சிலரே கருப்பு ஆடுகள் போல செயல்படுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் சில அதிகாரிகளை நாம் அடக்க முடியாது .
அதனால் நாம்தான் பணிகளை ரகசியமாக செய்ய வேண்டும். இதனால் முக்கியமான முடிவுகளை டாப் சீக்ரெட்டாக எடுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். தேர்தல் நேரம் என்பதால் முக்கியமான முடிவுகளை முடிந்த அளவு ரகசியமாகவே எடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் உத்தரவிட்டுள்ளாராம்.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications