சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேச வேணாம்.. நிப்பாட்டுங்க! எடப்பாடிக்கு வந்ததே கோபம்.. கூடவே இருக்கும் மாஜிக்களுக்கு ஆர்டர்! ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாய் பூட்டு போட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டி எப்படியாவது பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதுதான் சான்ஸ்.. இப்போது விட்டால் எப்போதும் வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பெற தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் இதற்கு ஓபிஎஸ் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை, மனுக்களை ஓ பன்னீர்செல்வம் போட்டு வருகிறார். ஒரு பக்கம் ஜூலை 11ம் தேதி நடக்க அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்க இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வைத்திலிங்கம்.. அதிமுகவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்.. ஓபிஎஸ் அடுத்த மூவ்? கொரோனாவால் பாதிக்கப்பட்ட வைத்திலிங்கம்.. அதிமுகவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்.. ஓபிஎஸ் அடுத்த மூவ்?

வாய்ப்பூட்டு

வாய்ப்பூட்டு

இந்த நிலையில்தான் அதிமுகவில் இருக்கும் சில மாஜி அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறாராம். சமீபத்தில் எடப்பாடி ஆதரவு மாஜி அமைச்சர்கள் சிலர் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக செய்தியாளர்களிடம் பேசினர். இதில் சில விஷயங்களை சட்ட ரீதியாக அவர்கள் எடுத்துரைத்தனர். பொதுக்குழு விதிகள், அதிமுக விதிகள் என்று சில விஷயங்களை சட்ட ரீதியாக அவர்கள் குறிப்பிட்டனர். அதோடு ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் சில மாஜிக்கள் குறிப்பிட்டனர்.

 ஏன்?

ஏன்?

ஆனால் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் இப்படி பேசுவது ஓபிஎஸ் தரப்பிற்குத்தான் சாதமாக மாறி உள்ளது. எடப்பாடி தரப்பு வைக்கும் பாயிண்டுகளுக்கு எல்லாம் சட்ட ரீதியாக உடனுக்குடன் ஓபிஎஸ் தரப்பு பதிலடி கொடுக்கிறது. உதாரணமாக சமீபத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று சிவி சண்முகம் கூறினார். பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேறாததால் அந்த பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறினார்.

என்ன பேசினார்கள்?

என்ன பேசினார்கள்?

இதற்கு உடனே பதிலடி தந்த ஓபிஎஸ் தரப்பு.. அப்படி என்றால் பொதுக்குழு மொத்தமாக காலாவதி ஆகிவிட்டது என்றுதானே அர்த்தம். அந்த தீர்மானத்திற்கும் ஒப்புதல் பெறப்படவில்லையே என்று பதிலடி கொடுத்தது. இப்படி எடப்பாடி மாஜி அமைச்சர்கள் பேசும் ஒவ்வொரு கருத்துக்கும் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. சில மாஜி அமைச்சர்களோ எடப்பாடி தரப்பு பிளானை வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் உளறிக்கொட்டிக்கொண்டு இருக்கின்றன.

ஓபி ரவீந்திரநாத்

ஓபி ரவீந்திரநாத்

சமீபத்தில் ஓபி ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எடப்பாடி ஆதரவு மாஜி வளர்மதி பேசி சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில்தான் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டது. இதில் நீண்ட சட்ட போராட்டம் நடக்கும். இதன் காரணமாக வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது.. யாரும் செய்தியாளர்களிடம் பேச வேண்டாம். 2 மாஜி அமைச்சர்கள் தவிர வேறு யாரும் செய்தியாளர் சந்திப்பில் பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறாராம்.

Recommended Video

    எடப்பாடியெல்லாம் எம்ஜிஆராக முடியாது! ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை! - ஜுனியர் எம்ஜிஆர்
    செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பு

    தேவையின்றி செய்தியாளர் சந்திப்பில் பேச வேண்டாம் என்று எடப்பாடி தரப்பு மாஜிக்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறதாம். தேவையின்றி சில நிர்வாகிகள், மாஜிக்கள் ஓபிஎஸ் தரப்பிற்கு தகவல் செல்ல கூடாது. ஓபிஎஸ் தரப்பு பாயிண்டை பிடிக்க கூடாது. அதனால் அடக்கியே வாசியுங்கள். அதிகாரபூர்வமாக பேச வேண்டிய சிலர் மட்டும் பேசட்டும். மற்ற அமைச்சர்கள் யாரும் பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறாராம்.

    English summary
    Why does Edappadi Palanisamy order his supporting ex-ministers not to speak to press? Why does Edappadi Palanisamy order his supporting ex-ministers not to speak to press? அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாய் பூட்டு போட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X