"ஒரே எதிரி".. ஸ்டாலின் ஏன் அப்படி சொன்னாரு? பளிச்சென விசாரித்த எடப்பாடி.. அச்சச்சோ குஷியில் பாஜக!
சென்னை: பாஜக தான் நமக்கு முதல் எதிரி. அதிமுக இல்லை. ஜெயிப்பதற்காக பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது அதிமுக வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் பாஜகவும் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது.
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சமீபத்தில் தமிழ்நாடு வந்து இருந்தார். கோவையில் பேசிய அவர், கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

பாஜக பூத் கமிட்டி
கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா, தமிழ்நாட்டில் தாமரை மலரும். தமிழத்தில் உட்கட்டமைப்பு வசதி சரியாக இல்லை. மக்களுக்கு வேலை இல்லை. இங்கே உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் பாஜக தேவை. அதற்கு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும். இதுதான் இப்போது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மாபெரும் வெற்றிபெறும். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வரப்போகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் விரைவில் நடக்கும். திமுக என்றால் மாநில கட்சி கிடையாது. அது ஒரு குடும்பத்தின் கட்சி, என்று கூறினார்.

திமுக கூட்டம்
இந்த நிலையில்தான் கடந்த 28ம் தேதி திமுக சார்பாக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட அணி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். திமுக அணிகளின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கடந்த வாரம் இந்த ஆலோசனையை நடத்தினார் ஸ்டாலின். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் நமக்கு முதல் எதிரி. அதிமுக இல்லை. ஜெயிப்பதற்காக பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எச்சரிக்கை செய்தார். பாஜகவை தோற்கடிக்க திமுக நிர்வாகிகள் தற்போதே தயாராக வேண்டும். அணிகளில் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதிக் கொண்டு இருக்காமல் களப்பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள். வாக்குச்சாவடி அளவில் நாம் பணிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

பாஜக
திமுக நம் மீது கவனம் செலுத்துகிறது. நாம் செல்லும் திசை சரிதான். நம்மை கண்டுகொள்ளாத திமுக முதல்முறை நம்மை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நாம் செல்லும் வழியை தீவிரமாக்க வேண்டும் என்று ஸ்டாலினின் எச்சரிக்கை பற்றி பாஜக விவாதம் செய்து இருக்கிறதாம். இந்த எச்சரிக்கை பாஜகவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடியும் இது குறித்து மா.செ.க்களிடம் பேசியிருக்கிறாராம். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலர்கள் கூட்டத்தை நடத்தினார். ஓ பன்னீர்செல்வம் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு போட்டியாக எடப்பாடி கூட்டம் நடத்தினார்.

என்ன சொன்னார்?
இதில் பேசிய எடப்பாடி, 2024 தேர்தலுக்கு எல்லோரும் இப்போதே தீவிரமாக தயார் ஆகுங்கள். தொகுதி அளவில் புதிய பூத் கமிட்டியை உருவாக்குங்கள். நம்முடைய பலம் பூத் கமிட்டிகள்தான். ஆனால் உட்கட்சி மோதல் காரணமாக இந்த பூத் கமிட்டிகள் பலத்தை நாம் இழந்துவிட்டோம். உடனே பூத் கமிட்டிக்கு ஆள் எடுக்கும் பணிகளை தொடங்குங்கள். நாம் எடுக்கும் ஆட்கள் வெறித்தனமாக இருக்க வேண்டும். வேகமாக வேலை செய்ய வேண்டும். அப்படி துடிப்பான இளைஞர்களை பூத் கமிட்டி ஆட்களாக நியமியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

எச்சரிக்கை
பாஜக தற்போது பூத் கமிட்டியை கொங்கு மாவட்டங்களில் வலுப்படுத்தி வருகிறது. அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் சிலரை தூக்கி அவர்கள் பூத் கமிட்டியை உருவாக்கி வருகின்றனர். இன்னொரு பக்கம் அதிமுகவில் இரண்டு குழு உருவாகி உள்ளதால் அதிமுக பூத் கமிட்டிகளும் பல்வேறு மாநிலங்களில் உடைந்து உள்ளது. இதையும் மனதில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டியை வலிமைப்படுத்துங்கள் என்று கூறி இருக்கிறாராம். ஸ்டாலின் பற்றி மா.செ.க்களிடம் பேசிய எடப்பாடி, "திமுகவுக்கு அதிமுக எதிரி இல்லைன்னு ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதனால், திமுகவினரின் கவனம் பாஜக மீதுதான் அதிகமிருக்கும். அதிமுகவை பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அதனால், புதிய வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தில் இணைக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

கவனம் இங்கே இருக்கட்டும்
உச்சநீதிமன்றத்தில் 4-ந்தேதி வரும் வழக்கின் விசாரணையின் போக்கினையறிந்து புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். நம் வழக்கை கவனிக்கும் உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர்களிடம் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். நிச்சயம் நமக்கு சாதகமாகத்தான் நடக்கும். சிலர் கட்சியை உடைக்க பார்க்கிறார்கள். நாம் வளர்த்த கட்சியை உடைத்து இரண்டாக்க பார்க்கிறார்கள். அவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாம் சட்ட போராட்டம் செய்து கொண்டு இருக்கிறோம். அதில் வெல்வோம். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். பாஜக நம்மை கட்டுப்படுத்துவதாக சிலர்நினைக்கிறார்கள். நம்மை பாஜக நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. பாஜக நம்மை இதற்கு முன்பு கட்டுப்படுத்தியது இல்லை. இப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. நாடாளுமன்ற தேர்தல்களில் நாம்தான் முடிவு எடுப்போம், என மா.செ.க்களிடம் சொல்லியிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் 4-ந்தேதி நடப்பதை பொறுத்து புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்தவிருக்கிறது எடப்பாடி தரப்பு.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications