Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாடகி முதல் சாரா வரை.. "பழைய" போட்டோக்களை கிளறி.. தனுஷை குறி வைக்கும் கும்பல்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள நிலையில் தனுஷுக்கு எதிராக இணையத்தில் விஷமத்தனமான பிரச்சாரங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இணையத்தில் நடக்கும் இந்த விஷமப்பிரச்சாரம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக நேற்று ட்விட்டரில் அறிவித்தார். 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருவதாகவும், இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாகவும் தனுஷ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தனுஷை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இதே அறிக்கையை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளார். இது எங்களின் தனிப்பட்ட முடிவு, இது பர்சனல் விஷயம், இதில் எங்களுக்கு போதுமான பிரைவசியை கொடுக்க வேண்டும் என்று இருவரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 தனுஷ் விவாகரத்து

தனுஷ் விவாகரத்து

இரண்டு பேருமே தங்களுக்கு பிரைவசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையிலும் கூட பலர் தனுஷுவின் விவாகரத்து குறித்து மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனுஷ் உடன் நடித்த சினிமா நடிகைகள் தொடங்கி அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் வரை பலரை வைத்து மிக மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். தனுஷ் போன்ற உச்ச நடிகர் விவாகரத்து செய்யப்படும் போது இது போன்ற விமர்சனங்களை சில நெட்டிசன்கள் வைப்பது இயல்புதான். ஆனால் தனுஷ் என்ற ஒரே காரணத்திற்காக இந்த முறை விமர்சனங்கள் எல்லைமீறி வைக்கப்பட்டு வருகிறது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

முக்கியமாக ஐஸ்வர்யா முன்பு ஒரு பிரபல நடிகருடன் காதலில் இருந்ததாக ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. அது போக தனுஷ் இதற்கு முன் நடித்த சில சினிமா நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில்தான் நடிகை சமந்தாவிற்கு விவாகரத்து நடந்தது. இதையும் தனுஷின் இந்த முடிவையும் ஒப்பிட்டும் சிலர் மோசமான கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர். முன்பே இப்படி அமலா பாலுடன் தனுஷ் கிசுகிசுக்கப்பட்டார்.

தவறான கருத்து

தவறான கருத்து

சமீபத்தில் அட்ரேங்கி ரே இந்தி படத்தில் நடிகர் தனுஷ் சாரா அலிகானுடன் நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் காபி வித் கரண் நிகழ்ச்சியிலும் கலந்து கொ, 7ண்டனர். இதில் இருவருமே நல்ல நட்பாக பேசினார்கள். இதையும் கூட குறிப்பிட்டு தவறான கருத்துக்களை இணையத்தில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். அதாவது தனுஷின் இந்த முடிவிற்கு சாராவும் ஒரு காரணம் என்பது போல வன்மங்களை வெளியிட்டு வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒருபடி மேலே போய் தனுஷின் பழைய புகைப்படங்களை பகிர்ந்து ஒரு கும்பல் அவரை தாக்க தொடங்கி உள்ளது.

 பழைய போட்டோஸ்

பழைய போட்டோஸ்

தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு பின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவருடன் நட்பாக கட்டியணைக்கும் இருக்கும் புகைப்படம் அது. அப்போது பிரபல பாடகி ஒருவர் சினிமா பிரபலங்கள் குறித்து சில லீக்குகளை வெளியிட்டு வந்தார். அப்போது தனுஷ் மீதும் அந்த பாடகி புகார் வைத்து இருந்தார். இதில்தான் தனுஷுக்கு டிவி தொகுப்பாளினி ஒருவருக்கும் தொடர்பு என்று அந்த பாடகி புகார் அளித்தார். இந்த பழைய போட்டோக்களை எல்லாம் கிளறி எடுத்து விமர்சனங்களை வைத்து வருகின்றன.

தனுஷ் கோரிக்கை

தனுஷ் கோரிக்கை

அந்த சம்பவம் அப்போதே ரஜினி குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் சில சினிமா பிரபலங்களை தனுஷ் பிரிந்துவிட்டார் என்றும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தனது விவாகரத்து முடிவில் போதிய பிரைவசி வேண்டும் என்று தனுஷ் கோரிக்கை விடுத்தும் கூட மிக மோசமான வகையில் அவர் மீது "moral policing" தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 18 வருடமாக தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கையில் இணைந்து இருந்தனர். இதில் பல ஏற்ற, இறக்கங்களை இவர்கள் சந்தித்து உள்ளனர்.

வாழ்த்து

வாழ்த்து

சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யாவை புகழ்ந்து தனுஷ் பேசி இருந்தார். ரஜினியும், தனுஷும் இணைந்து தேசிய விருது விழா நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். வளர்ந்த இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் பிரிந்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு பின் வலுவான காரணங்கள் இருக்கலாம். அந்த காரணம் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்து இருக்கும்... இணையத்தில் எழுதுவதும், gossip எழுத்தாளர்கள் எழுதுவதும் உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவே..

தனுஷ் சித்திரம்

தனுஷ் சித்திரம்

அப்படி இருக்கும் நிலையில் தனுஷின் மண வாழ்க்கை முறிவு நேரத்தில் இப்படி தேவையில்லாத கருத்துக்களை பலர் வெளியிட்டு வருகின்றனர். தனுஷ் தனது கெரியரில் மிக முக்கிய நேரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். அவர் ஏன் தனது மனைவியை பிரிந்தார்.. உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.. இதில் சரி எது, தவறு எது என்று நெட்டிசன்களோ, இணைய பிரபலங்களோ கருத்து தெரிவிக்க முடியாது.. அப்படி இருக்கும் போது அவர்களுக்கான பிரைவசியை வழங்குவதே இருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எல்லோருக்கும் செய்யும் மரியாதையாக இருக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+