Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த கேங்கை கழற்றிவிட்ட எடப்பாடி? 2 பேரை ஓபிஎஸ் வீட்டுக்கு அனுப்பி! புதுசா இருக்கே! கசிந்த சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார். இதில் ஜெயக்குமார் தொடங்கி ஓ பன்னீர்செல்வம் வரை பலரும் வெளிப்படையாக செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டும் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் அமைதியாக இருக்கிறார்.. இந்த அமைதிக்கு பின் வேறு ஒரு பிளானும் இருக்கிறதாம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பொதுக்குழு 23ம் தேதி கூட போகிறது என்று தகவல் வந்ததுமே கண்டிப்பாக ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கப்படும் என்று கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் அதற்கு முன்பே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே ஒற்றை தலைமை குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டது. மாதவரம் மூர்த்தி தொடங்கி வைக்க நிர்வாகிகள் பலரும் அந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே ஒற்றை தலைமை குறித்த தீவிரமாக பேசி இருக்கிறார்கள்.

இப்போது என்ன நடக்கிறது

இப்போது என்ன நடக்கிறது

அப்போது தொடங்கிய ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சத்தை தொட்டு.. நேற்று ரத்தக்காயம் வரை சென்றது. நேற்று நடந்த அதிமுக தீர்மானக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் அடித்துக்கொண்டதில் ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்! இன்றும் எடப்பாடி வீட்டிலும், ஓபிஎஸ் வீட்டிலும் மாறி மாறி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எடப்பாடி சார்பாக மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயன்று வருகிறார்கள்.

எடப்பாடி தரப்பு

எடப்பாடி தரப்பு

இதில் எடப்பாடி தரப்பு வைக்கும் வாதமோ.. கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை. அதற்கு முதல்வராக இருந்த எடப்பாடிதான் சரியாக இருப்பார். இரட்டை தலைமை இருந்தால் கட்சியை காக்க முடியாது. வலுவான முடிவு எடுக்க முடியாது. கட்சி பாதாளத்திற்கு சென்றுவிடும். கடந்த தேர்தலில் 60+ இடங்களை வெல்ல எடப்பாடிதான் காரணம். அதனால் அவர்தான் தலைவராக அல்லது பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கூறுகிறது.

ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் தரப்பு

ஆனால் ஓபிஎஸ் தரப்போ இப்போது கட்சியில் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது. யாருக்குள்ளும் மோதல் இல்லையே. எடப்பாடிக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறதே. இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசை பட முடியாது. ஏற்கனவே நிறைய இழந்துவிட்டேன். இனியும் இழக்க முடியாது. கட்சியை விட்டுத்தர நான் தயாராக இல்லை. எப்போதும் நான்தானே விட்டுத்தருகிறேன். இப்போது எடப்பாடி விட்டுத்தரட்டும் என்று பன்னீர்செல்வம் உறுதியாக சொல்லிவிட்டாராம்.

சமாதானம்

சமாதானம்

இந்த நிலையில்தான் ஓபிஎஸ்சை சமாதானம் செய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஓபிஎஸ் வீட்டிற்கு செங்கோட்டையன், தம்பிதுரை மாறி மாறி சென்று வருகிறார்கள். முதலில் ஆர் பி உதயகுமார், காமராஜ் ஆகியோரை வைத்து ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய எடப்பாடி முயன்றார். ஆனால் ஓபிஎஸ் இவர்களின் சமாதான பேச்சுக்கு மசியவில்லை. இவர்கள் சொன்ன எதையும் ஓபிஎஸ் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

முடியாது

முடியாது

என்ன நடந்தாலும் பொதுச்செயலாளர் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. நான்தானே ஒருங்கிணைப்பாளர்.. நான் கையெழுத்து போட்டால் தானே என்று ஓபிஎஸ் உறுதியாக சொல்லிவிட்டாராம். இந்த நிலையில்தான் தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோரை இரண்டு நாட்களாக எடப்பாடி, ஓபிஎஸ் வீட்டிற்கு அனுப்பி சமாதானம் செய்து வருகிறாராம். நேற்று ஓபிஎஸ் வீட்டிற்கு மாறி மாறி செங்கோட்டையன், தம்பிதுரை இருவரும் செல்ல இதுதான் காரணம் என்கிறார்கள்.

அந்த கேங்க்

அந்த கேங்க்

பொதுவாக எடப்பாடி - ஓபிஎஸ் இடையே மோதல் வந்தால் முக்குலத்தோர் தலைவர்கள் சமாதானம் செய்வார்கள். ஆர்.பி உதயகுமார், காமராஜ் ஆகியோர் சமாதானம் செய்வார்கள். அவர்கள் இல்லையென்றால் கொங்கு மண்டல நிர்வாகிகளான மணியான குழு சமாதானம் செய்வார்கள். இல்லையென்றால் ஜெயக்குமார் கூட இருவருக்கும் இடையில் சமாதானம் செய்வார். ஆனால் இவர்கள் மீது எல்லாம் ஓபிஎஸ் கோபமாக இருக்கிறார். இதனால் இவர்கள் பேச்சை ஓபிஎஸ் கேட்க மாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோபம்

கோபம்

அதனால்தான் இந்த முறை அந்த கேங்கை விட்டுவிட்டு.. செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோரை எடப்பாடி சமாதானம் பேச அனுப்பி இருக்கிறார் என்கிறார்கள். இது போக.. எடப்பாடி என்ன பேசினாலும் அது தவறாக செல்ல வாய்ப்பு உள்ளதால் எதையும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். தேவையான விஷயங்களை அவர் மீட்டிங்கில் பேசிக்கொள்வார். மீடியாவிடம் பேச வேண்டிய விஷயம் இது இல்லை. அதனால்தான் அவர் அமைதியாக இருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்!

சீக்ரெட்

சீக்ரெட்

மேலும் அதிமுகவை மொத்தமாக கைப்பற்ற எடப்பாடி வேறு ஒரு பிளானையும் வைத்து இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் சீக்ரெட்டை உடைக்கிறார்கள். அதன்படி பொதுக்குழுவில் தனி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பிளான் போட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதிமுக சார்பாக பொது தீர்மானம் வரவில்லை என்றால் அவர் தனி தீர்மானம் கொண்டு வருவார். இந்த தனி தீர்மானம் பொதுச்செயலாளர் பதவி அல்லது தலைவர் பதவியை குறி வைத்து இருக்கலாம். பொதுச்செயலாளர் பதவிக்கு சிக்கல் என்றால் புதிதாக தலைவர் பதவியை உருவாக்க அவர் முயற்சி செய்யலாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+