ஆடு பகை குட்டி உறவா? ஓபிஎஸ்ஐ நீக்கிய எடப்பாடி ஓபி ரவீந்திரநாத்தை நீக்காதது ஏன்! ஓ இது தான் காரணமா?
சென்னை : அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான கே பி முனுசாமி ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மட்டும் நீக்கப்படாதது ஏன்? அதற்கான பின்னணி என்ன? என்பது அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ள தகவல்களை பார்க்கலாம்..
Recommended Video
கிளைச் செயலாளராக அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் ,எதிர்க்கட்சித் தலைவர் எனத் தொடங்கி அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க தகுதியான பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஜெயக்குமார் பற்றவைத்த நெருப்பு இன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வந்து நின்றிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டங்கள் அனைத்தும் வீணாகத்தான் போகிவிட்டது. அதே நேரத்தில் அமைதியாக இருந்தாலும் பின்னணியில் மிகத் தீவிரமாக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதிர்ச்சி வைத்தியம்
அந்த வகையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே பேசிய கேபி முனுசாமி ஓபிஎஸ் குறித்து தனது பலத்த அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார் மேடையில் பேசும் போதும் இதனை அவர் வலியுறுத்தினார் கட்சி அலுவலகத்தை உடைக்கும் அளவுக்குச் சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில், அது தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.

அதிரடி அறிவிப்பு
ஓபிஎஸ் -ன் முன்னாள் ஆதரவாளரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்து தனது அரசியல் வாழ்வை காப்பாற்றிக் கொண்டுள்ளவருமான நத்தம் விஸ்வநாதன் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட அனைவரும் நீக்கப்பட்டனர் எனவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி.
அப்போது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். ஆனால் அது குறித்து அப்போதல்ல இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு கட்சியில் அவ்வளவு செல்வாக்கா? அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி பின் வாங்கியது ஏன்? அதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசிய போது பல தகவல்கள் கிடைத்தன. அதில் முதல் காரணம் ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டால் நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு மக்களவையில் இருக்கும் ஒரே ஒரு எம்பியும் இல்லாமல் போய்விடுவார் இதனால் மக்களவையில் அதிமுக இல்லாத நிலை ஏற்படும் என்பது முதல் காரணம்.

எடப்பாடிக்கு சிக்கல்
அடுத்ததாக கட்சி அலுவலகத்தை உடைத்தார், கட்சிக்கு எதிராக செயல்பட்டார், பொதுக்குழு கூட்டத்தை நடத்த விடாமல் நீதிமன்றம் சென்றார் உள்ளிட்ட கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாகவே ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த எந்த முயற்சிகளிலும் ரவீந்திரநாத் நேரடியாக பங்கேற்கவில்லை. அதேபோல அதிமுகவுக்கு எதிராக ஒரு இடத்தில் கூட பேசியோ அல்லது அறிக்கையை விடவோ இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை அதனால் அவரை நீக்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவ்வாறு நீக்கினாலும் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதாலேயே அவரை நீக்கவில்லை என்கின்றனர் விவரம் தெரிந்த ரத்தத்தின் ரத்தங்கள்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications