சந்தீப் ராய் மாற்றம் ஏன்? கோட்டைக்குப் பறந்த ரிப்போர்ட்? தூக்கி அடித்த முதல்வர்? புதிய அப்டேட்
சென்னை: காவல்துறை ஆணையர் பதவியிலிருந்து சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பு அருண் ஐபிஎஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி நீக்கம் ஏன் நடந்துள்ளது? அதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன?
சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை மாற்றிவிட்டு அந்தப் பதவிக்கு ஏடிஜிபியாக இருந்துவந்த அருணை தமிழக அரசு நியமித்துள்ளது. அதற்குக் காரணம், அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யவே இல்லை என்பதே எனக் கூறப்படுகிறது. அக்கருத்து சரியாதுதானா என்பது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரி சித்தண்ணன் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

"சம்பவம் நடக்கும் அனைத்து இடங்களுக்குக் காவல் ஆணையர் நேரில் போய் தான் ஆகவேண்டும் என்பது இல்லை. அவருக்கு அடுத்த படிநிலையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் கொலை நடந்த இடத்திற்குச் சென்று அங்கேயே ஆய்வு செய்து அறிக்கையைத் தலைமைக்கு அனுப்பி உள்ளனர். ஆகவே, ரத்தோர் போகாதது ஒரு குறையல்ல. அதே நேரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்துள்ளனர். அங்கே களத்திற்குச் சென்றுள்ளனர்.
அறிக்கைகள் விட்டுக் கண்டித்துள்ளனர். அந்தத் துயரத்திற்கு ஒரு மருந்திடும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். இதன் மூலம் முதல்வர் சட்டம் ஒழுங்கு என்பது தனது முழுக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால் எந்த அதிகாரியையும் மாற்றி வேறு ஒருவரை நியமிக்கலாம் என்பதை அவர் இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார். இந்தப் பதவி மாற்றம் அவரைத் தண்டிப்பதற்காகச் செய்யப்பட்டுள்ளது என்பது சரியான கருத்து அல்ல" என்று கூறியுள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் ஆம்ஸ்ட்ராங் போன்றவர் வெட்டிப் படுகொலை செய்யப்படும் போது அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் காவல்துறை ஆணையர்தான். அதுவும் நகரத்தின் முக்கிய பகுதிக்குள் நுழைந்து ஒருவரைப் படுகொலை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால், அது பொதுமக்கள் மத்தியில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தும். அதுவே ஒரு சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். எப்படி இதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவம் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்பதைக் காட்டியதோ அதேபோலவே ஆம்ஸ்ட்ராங் கொலையும் எடுத்துக் காட்டியுள்ளது.
இந்தக் குறிப்பிட்ட சம்பவம் நடு ராத்திரியில் நடக்கவில்லை. மாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் நடந்துள்ளது. அப்படிப் பார்த்தால் திட்டமிட்டு படுகொலை செய்வதற்காக வந்துள்ளனர். ஏதோ தற்செயலாக நடந்த தகராறு கிடையாது. திட்டமிட்டு உள்ளே புகுந்து வெட்டி வீசி உள்ளனர். இந்தளவுக்கு ஒரு தைரியம் எப்படி அந்த ரவுடிகளுக்கு வந்தது? நாம் கொலை செய்தால், காவல்துறை ஒன்றும் செய்து விடாது என்ற துணிச்சல் எப்படி வருகிறது இவர்களுக்கு?
அந்தளவுக்கு ரவுடிகள் மத்தியில் பணம் புழங்க ஆரம்பித்துள்ளது. அவர்கள் சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம்தான் பணம் ஈட்டுகிறார்கள். அப்படி ஈட்டுகிறார்கள் என்றால், காவல்துறை தன் கடமையை தவறியுள்ளது. நடமாட்டம் அதிகரிப்பதால் வியாபாரம் பெருகுகிறது. அதன்மூலம் அடி, தடி அதிகரித்து ரவுடிசம் பெருகி உள்ளது. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்குத்தான் உள்ளது. அவர்கள் அதைச் சரியாகக் கண்காணிக்கவில்லை என்பதால்தான் இப்படி ரவுடியிசம் பெருகி வருகிறது.
குறிப்பாக வடசென்னை எல்லாம் எப்போதும் கவனிப்பில் இருக்கவேண்டிய பகுதி. அதில் சென்னை காவல் ஆணையர் தனது பொறுப்பிலிருந்து தவறிவிட்டார் என்றே கருதுகிறேன். ஆகவே, தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை தேவையான ஒரு நடவடிக்கைதான்.
காவல்துறை உயர் அதிகாரிகள் கீழே உள்ள காவலர்கள் பலி ஆடுகளாக ஆக்கிவிட்டு, இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு பெரிய சம்பவம் நடக்கும்போது அதன் தலைமையில் உள்ள அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும். அவரே தனது ராஜினாமாவை அளித்திருக்கவேண்டும். அல்லது பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கும்படி கடிதம் அளித்திருக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் முற்றிலும் தனது கடமையை நிறைவேற்றத் தவறி இருக்கிறார். அதே போல் கள்ளச்சாராய மரணங்களுக்கு கூட டிஜிபியின் தோல்விதான் காரணம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications