சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது என்ன கொங்கு கட்சியா?.. உறுத்திய 4 விஷயம்.. கம்பேக்கிற்கு கட்டம் கட்டிய சசிகலா.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் பெரிய கம்பேக் கொடுப்பதற்காக காய்களை நகர்த்தி வருகிறார்... சசிகலா. இத்தனை வருடங்கள் தமிழக அரசியலில் சைலன்ட் பிக்பாஸாக இருந்தவர்.. தற்போது வெளிப்படையாகவே சசிகலா தனது அரசியல் வருகையை "ஆடியோக்கள்" மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தற்போது அரசியலுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் முடிவில் சசிகலா இருக்கிறார். தினம் ஒரு ஆடியோ வெளியாக.. அரசியல் களத்திலும், அதிமுகவிற்குள்ளும் சசிகலா பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

கட்சிக்குள் மீண்டும் வருவேன்.. கண்டிப்பாக வருவேன்.. கட்சியை சரி செய்து விடலாம்.. கொரோனாவிற்கு பின் வருவேன் என்று சசிகலா தான் பேசும் ஆடியோக்களில் அதிமுக, அமமுக நிர்வாகிகளிடம் குறிப்பிட்டு வருகிறார். தினமும் ஒரு ஆடியோ வெளியாகி வருவதால் அதிமுகவில் சிலர் ஜெர்க்காகி உள்ளனர்.

தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன்மா.. உடைந்து அழுத அதிமுகவின் ராஜாரகுபதி.. பதறிய சசிகலா! தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன்மா.. உடைந்து அழுத அதிமுகவின் ராஜாரகுபதி.. பதறிய சசிகலா!

சசிகலா

சசிகலா

இந்த நிலையில் சசிகலாவின் இந்த திடீர் கம்பேக்கிற்கு பின் 4 முக்கியமான காரணங்கள் இருப்பதாக சசிகலாவிற்கு நெருக்கமான சொந்தங்கள் கூறுகிறார்கள். அதில் முதல் விஷயம் அதிமுக தென் மண்டலத்தில் சரிந்தது. அதிமுக மேற்கு மண்டலத்தில் வலுவான கட்சியாக இருந்தாலும் தென் மண்டலம் மற்றும் டெல்டாவில் கணிசமான வாக்குகளை பெறும். முக்கியமாக முக்குலத்தோர் வாக்குகளை அவ்வப்போது அதிமுகவும் கணிசமாக பெற்றுத்தான் வந்தது.

கம்பேக்

கம்பேக்

ஆனால் இந்த தேர்தலில் தென் மண்டலம், டெல்டா இரண்டிலும் அதிமுக சரிந்துள்ளது. பல ஜாதி ரீதியான வாக்குகள் அப்படியே அதிமுகவிற்கு எதிராக சென்றுள்ளது. ஒரு காலத்தில் அதிமுகவை ஆதரித்த சில ஜாதிகள் இந்த முறை கைவிட்டுள்ளன. கிட்டத்தட்ட அதிமுக இப்போது கொங்கு மண்டல கட்சி போல மாறிவிட்டது. கொங்கு மண்டலம் என்பதை விட கோவைக்கான கட்சி என்பது போல அதிமுக சுருங்கிவிட்டதாக சசிகலா ஆதங்கப்பட்டு இருக்கிறார். இதுதான் அவரின் கம்பேக்கிற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை

இது போக சசிகலாவிற்கு அதிமுகவில் இருந்தே சில நம்பிக்கையான சிக்னல்கள் வந்துள்ளதாம். இங்கே இருப்பவர்கள் சண்டை போடுகிறார்கள். இப்படியே போனால் அடுத்த லோக்சபா தேர்தல் என்ன உள்ளாட்சி தேர்தலுக்கு கூட அதிமுக இருக்காது. கட்சி காணாமல் போய்விடும். இரட்டை இலைக்கு இப்போதும் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கிறார்கள்.

சிக்னல்

சிக்னல்

அவர்களை கைவிட கூடாது.. அதற்காகவாது நீங்கள் மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும் என்று அதிமுகவில் இருக்கும் சில முக்கிய தலைகளே சசிகலாவிற்கு சிக்னல் அனுப்பி இருக்கிறார்கள். நீங்க வந்தாதான் சரியா இருக்கும் என்று முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூட சசிகலாவிற்கு தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுவும் அவரை மீண்டும் அரசியலுக்குள் வர தூண்டியதாக கூறப்படுகிறது.

இரண்டு விஷயம்

இரண்டு விஷயம்

இந்த இரண்டு விஷயங்கள் போக குடும்ப ரீதியாகவும் சசிகலாவிற்கு ஏகப்பட்ட நெருக்கடி சென்றுள்ளது.குடும்ப சொத்துக்களை காக்கவாது நீங்கள் மீண்டும் அரசியலுக்குள் செல்ல வேண்டும். இப்படியே போனால் எதிர்காலத்தில் ஒன்றும் இல்லாமல் போய்விடுவோம். கட்சியை விடுங்க.. நம் குடும்ப உறுப்பினர்களே செல்வாக்கு இல்லாத நிலைக்கு போய்விடுவோம்.

செல்வாக்கு

செல்வாக்கு

இப்போதே ஏதாவது பணி நடக்க வேண்டும் என்றால், சரியாக காய் நகர்த்த முடியாமல் தவிக்கிறோம். பழைய வாய்ஸ் இல்லை. மன்னார்குடியிலேயே இப்போது நம் குடும்பத்திற்கு செல்வாக்கு குறைந்துவிட்டது. இதை சரி செய்வதற்காகவாது நீங்கள் கண்டிப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும் என்று அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் பலர் கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர்... கோவில் டிரிப்களில் சசிக்கு இதே அறிவுரை சொல்லப்பட்டு இருக்கிறது.

பிளவு

பிளவு

இது போக அதிமுகவில் பிளவு ஏற்பட்டுவிட்டது. முன்னாள் அமைச்சர்கள், இபிஎஸ், ஓபிஎஸ் என்று எல்லோரும் தனி தனியாக பிளவுபட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போதுதான் உள்ளே செல்ல முடியும். இதுதான் தனக்கான நேரம் என்று சசிகலா நம்புகிறார். பிளவை பயன்படுத்தி.. உள்ளே ஒளியாக செல்லலாம் என்று சசிகலா நம்புகிறாராம்.

கஷ்டம்

கஷ்டம்

ஆனால் இவர் என்ன நம்பினாலும் அதிமுக இவரை உள்ளே விடுமா.. இவருக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பு தரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது . முக்கியமாக பல எதிர்ப்புகளை சாதுர்யமாக சந்தித்த இபிஎஸ் சசிகலாவை உள்ளே அனுமதிப்பாரா.. அவ்வளவு எளிதில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் நடந்து விடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Why Sasikala Natarajan, Who decides to leave politics, now plans to return to AIADMK all of a sudden after the election result?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X