சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவை சந்தித்தவுடன் முடிவு.. டிடிவி தினகரன் குற்றாலத்தை தேர்வு செய்ய காரணம் என்ன?

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தியதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தினகரன் குற்றாலத்தை தேர்வு செய்ய காரணம் என்ன?

    சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தியதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    இன்னும் இரண்டு நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நேற்று தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

    [இன்றே ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. இனி தமிழகத்தில் பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது! ]

    எப்படி செல்கிறார்கள்

    எப்படி செல்கிறார்கள்

    இன்று சென்னையில் இருந்து கிளம்பும் 18 எம்எல்ஏக்களும் மதுரை சென்றுவிட்டு பின் அங்கிருந்து குற்றாலம் செல்வார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. தாமிரபரணியில் புஷ்கர விழாவில் கலந்து கொண்டு பின் அவர்கள், குற்றாலம் செல்வார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    ஒருவர் இங்கு இருப்பார்

    ஒருவர் இங்கு இருப்பார்

    இந்த நிலையில் அனைவரும் குற்றாலம் சென்றாலும் ஆதரவாளர் வெற்றிவேல் மட்டும் சென்னையில் இருப்பார் என்று தகவல் வந்துள்ளது. டிடிவியுடன் சென்னையில் நடக்கும் பணிகளை கவனிக்க அவர் இங்கே இருக்க போகிறார் என்று கூறியுள்ளனர். அவர் தவிர்த்து மற்றவர்கள் குற்றாலத்தில் தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ளவர்களை தங்க தமிழ்செல்வன் வழிநடத்துவார் என்று கூறுகிறார்கள்.

    வந்துவிடுவார்கள்

    வந்துவிடுவார்கள்

    அதேபோல் திருப்பரங்குன்ற இடைத்தேர்தலுக்காக திருப்பரங்குன்றம் சென்று இருந்த டிடிவி ஆதரவாளர்கள், தொண்டர்கள் இரவே கிளம்பி குற்றாலம் வர இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி இவர்கள் எல்லோரும் குற்றாலம் வர உள்ளனர் என்று தெரிவிக்கிறார்கள். 150 கிலோ மீட்டர் தூரம்தான் என்பதால் இன்று மாலையே வர கூட வாய்ப்புள்ளது.

    யாருடைய ரெசார்ட்

    யாருடைய ரெசார்ட்

    இவர்கள் எந்த ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட உள்ளனர் என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால் இவர்கள் டிடிவிக்கு தூரத்து உறவினர் ஒருவருக்கு சொந்தமான ரெசார்ட்டில்தான் தங்க வைக்கப்பட உள்ளனர் என்று தகவல் வருகிறது. மன்னார்குடி சொந்தங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் குற்றாலத்தில் ஹோட்டல் வைத்து இருப்பதாகவும் அங்குதான் தங்க வைக்கப்பட உள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

    யார் கொடுத்த ஐடியா

    யார் கொடுத்த ஐடியா

    இது சசிகலா கொடுத்த ஐடியா என்றும் அரசியல் தரப்பில் பேசிக்கொள்கிறார்கள். இப்போது தமிழகத்தில் வேறு எங்கு தங்க வைத்தாலும் பாதுகாப்பாக இருக்காது என்பதால் அவர்கள் குற்றாலம் அழைத்து செல்லப்பட உள்ளனர் என்று பேசிக்கொள்கிறார்கள். கூவத்தூரை தொடர்ந்து இந்த புதிய ரெசார்ட் அரசியல் எத்தனை டிவிஸ்டுகளை கொடுக்கும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

    English summary
    18 disqualified MLAs are adviced to stay in Courtallam by TTV Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X