Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் நடித்த 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் தொடர்ந்து திரையிடுவதைத் தடுக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . இந்த இரண்டு பொதுநல வழக்கு மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே 'துரந்தர் 2' திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த டி.ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Durandhar 2

அவர் தனது மனுவில், "தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சுமார் நான்கு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 19ம் தேதி அன்று, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.

அத்துடன் இத்திரைப்படத்தின் கதைக்களமானது, 1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட 'கந்தஹார் கடத்தல்' சம்பவம், 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற உண்மையான வரலாற்று நிகழ்வுகளை, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களைத் தனி ஒருவனாக எதிர்கொள்ளும் ஒரு உளவுத்துறை அதிகாரியின் கற்பனைக் கதையோடு இணைத்துச் சித்தரித்துள்ளது.

திரைப்படம் ஓடும் நேரம் முழுவதும், மேற்கூறிய நிகழ்வுகளுக்கு மத்திய அரசு அளித்த பதிலடியை, முற்றிலும் பாராட்டும் வகையிலேயே இத்திரைப்படம் சித்தரிக்கிறது. அரசாங்கக் கொள்கைகள் குறித்த எந்தவொரு விமர்சனப் பார்வையோ அல்லது மாற்றுப் பார்வையோ இதில் முன்வைக்கப்படவில்லை. தேசியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தற்போதைய மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறையானது, புத்திசாலித்தனமானது, உறுதியானது மற்றும் இன்றியமையாதது என்று போற்றும் வகையிலேயே இத்திரைப்படத்தின் தொனி, கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் முடிவு ஆகியவை கட்டமைக்கப்பட்டிருக்கிறது .

தூரந்தர் திரைப்படம் வசூலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ( , தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவதால், தேர்தல் காலத்தில் தமிழ்நாட்டில் இத்திரைப்படத்தைத் தொடர்ந்து திரையிடுவது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும்.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து திரையிடுவது, சட்டமன்றத் தேர்தல்களின் நியாயத்தன்மையை அநீதியான முறையில் பாதிக்கும் . உண்மையான வரலாற்று நிகழ்வுகளை, அரசாங்கக் கொள்கையின் வெற்றிகளாகச் சித்தரித்து மகிமைப்படுத்துவது, பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தையே இந்தியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் சக்தியாகத் திட்டவட்டமாக முன்னிறுத்துகிறது. தேர்தல் நடத்தை விதிகள் தடை செய்யும் விளம்பர வடிவம் ஆக இருக்கிறது.

எனவே தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் திரையிட தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்கு பின் 'துரந்தர் 2' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் என்று ராகேஷ் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தனர். மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+