சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆகா..ஒன்னு கூடிட்டாங்களே! அண்ணாமலையுடன் எடப்பாடி! கூடவே சேர்ந்து கொண்ட டிடிவி தினகரன்! என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை : திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக புதிய ஆருடம் ஒன்றை அனைவரும் கூறிவரும் நிலையில் அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடன் சேர்ந்து இருக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தேர்தலை மிகப் பிரம்மாண்ட கூட்டணியுடன் சந்தித்த திமுக அமோக வெற்றி பெற்று முதன்முறையாக தமிழக முதல்வராக ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

திமுக அரசு கிட்டத்தட்ட 16 மாதங்கள் கழிந்துள்ள நிலையில், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், ஊழல் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 சோழர் கால வெண்கல சிலைகள், 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள்..சென்னையில் பறிமுதல்..எந்த கோவிலுக்கு சொந்தம்? சோழர் கால வெண்கல சிலைகள், 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள்..சென்னையில் பறிமுதல்..எந்த கோவிலுக்கு சொந்தம்?

ஆரூடங்கள்

ஆரூடங்கள்

அதே நேரத்தில் ஆரூடங்களுக்கும் அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதன் மூலம் ஹட்ரிக் சாதனை படைப்பாரா பிரதமர் மோடி என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பாஜக திமுக உள்ளிட்ட கட்சிகள் இதனை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர திமுகவும் இலங்கு செல்வாக்கை மீட்க அதிமுகவும் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்ள பாஜகவும் இந்த தேர்தலை பயன்படுத்த காத்திருக்கின்றன. இந்த நிலையில் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என எதிர்கட்சிகள் வரிந்து கட்டி ஆருடம் கூறி வருகின்றன. இது குறித்த பேச்சுகள் பல மாதங்களாகவே உலாவி வந்தாலும் தற்போது முக்கிய தலைவர்களை வெளிப்படையாக பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர். அண்ணாமலை கூறிய கருத்தை அதிமுகவும் பலமாக பற்றிக் கொண்டுள்ளது.

அண்ணாமலை

அண்ணாமலை

கோவையில் கடந்த 21ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் அவமரியாதையாக பேசியதாக பாஜக கோவை மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை,"நாங்கள் எந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதை எதிரி தான் தீர்மானிக்கிறார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை. நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள். " எனப் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதனை தொடந்து பேசிய தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசும் போது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருங்கால சந்ததிகளான மாணவர்கள் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என கூறினார்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்," அண்னாமலை வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்கிறார். என்.ஐ.ஏ. நடத்தும் சோதனையெல்லாம் பார்க்கும் பொழுது இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து பல ஆயூதங்கள் கைப்பற்றியது . இது எல்லாம் பார்க்கும்போது வாய்ப்பு இருக்கலாம். இது என்னுடைய சொந்த கருத்தாக நான் சொல்கிறேன்" என்றார். இப்படி எதிர்கட்சிகள் அனைவருமே எம்பி தேர்தலோடு, எம்.எல்.ஏ.தேர்தலையுமே எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
ADMK's Edappadi Palanishamy and Tamil Nadu BJP President Annamalai have been criticizing the government after one and a half years of DMK rule. In this situation, for the past few days, everyone is talking about a new arudam, along with the general secretary of AMUK, TTV Dhinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X