Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடைத்தேர்தலில் ‘சோலோ’வாக களமிறங்க ரெடி..? ஆலோசிக்கும் தேமுதிக! அதுவும் அதே நாளில்.. ஓஹோ.. ரைட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணி சார்பில் தமாகாவும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேமுதிகவின் திட்டம் என்ன என்பது அரசியல் அரங்கில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா என பிரதான கட்சிகள் இந்த இடைத்தேர்தலுக்காக முழுவீச்சில் களமிறங்கி உள்ளன.

இந்நிலையில், தேமுதிகவும் இந்த கோதாவில் குதித்துள்ளது. இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதா, இல்லையென்றால் யாருக்கு ஆதரவு தருவது என்பது பற்றி ஆலோசனை நடத்த மாவட்ட செயலலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

அதன்படி பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்றும், மார்ச் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் யார்?

அதிமுக கூட்டணியில் யார்?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுக இதில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை சிலை சின்னத்தில் தமாகா போட்டியிட்டது. அதனால், இந்த முறையும் அக்கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவிவர் தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்துப் பேசினர்.

சின்ன பிரச்சனை

சின்ன பிரச்சனை

இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமென்றால் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சின்னத்திற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால், கடந்த 6 மாதத்திற்கும் மேலாக நிலவி வரும் ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதலால், இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமாகாவுக்கு சீட் ஒதுக்கப்பட்டால், அக்கட்சி எந்த சின்னத்தில் நிற்கும் என்பது பற்றியும் அலசப்பட்டு வருகிறது, இதற்கிடையே பாஜகவும் இடைத்தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக?

தேமுதிக?

இதற்கிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைதந்துப் போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேமுதிக ஆதரவுடன் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் முத்துக்குமரன் 1,204 வாக்குகளையே பெற்றார். இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் களமிறங்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தேமுதிக ஆலோசனை

தேமுதிக ஆலோசனை

இடைத்தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 23ஆம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மாசெக்கள் கூட்டம்

மாசெக்கள் கூட்டம்

உட்கட்சி தேர்தல், இடைத் தேர்தல், செயற்குழு, பொதுக்குழு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 தேமுதிக வென்ற தொகுதி

தேமுதிக வென்ற தொகுதி

தேமுதிக ஏற்கனவே இந்தத் தொகுதியில், அதிமுக வட்டணியில் ஒருமுறை வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக சார்பில் விசி சந்திரகுமார், தற்போதைய அமைச்சர் முத்துசாமியை தோற்கடித்து வென்றிருந்தார். பின்னர் அவர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் தரப்பும்

ஓபிஎஸ் தரப்பும்

இதேபோல, ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் அதே நாளில் நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு அன்றைய நாளில் முடிவெடுக்க உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்கள் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துவிட்டார். பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எட்டப் போகின்றன என்பது போகப்போகத் தெரியும்.

2024க்கு முன்னோட்டம்

2024க்கு முன்னோட்டம்

2024 தேர்தலுக்கு தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆர்வம் காட்டக்கூடும் என்ற நிலையில், இந்த இடைத்தேர்தலில் தேமுதிக எடுக்கப்போகும் நிலைப்பாடு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் எனக் கருதப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் திமுக அல்லது அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்குமா அல்லது இடைத்தேர்தலையே புறக்கணிக்குமா என்ற கேள்விகளுக்கு எல்லாம் 23ஆம் தேதிக்குப் பிறகு பதில்கள் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+