கலங்கிய குட்டை.. "நல்லது நடக்கும்" ஸ்டாலின் சூசகம்.. "அது என் இஷ்டம்"..எக்குத்தப்பா எகிறுமா கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்கள் நீதி மய்யம் என்ன முடிவெடுக்க போகிறது? எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறதென்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், திமுக கூட்டணி குறித்த ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

கமலை பொறுத்தவரை இந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அத்துடன், பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று, டெல்லியில் தனது குரலை ஒலிக்கச் செய்து விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக இருக்கிறாராம்.

Will DMK alliance allocate Perambalur constituency to MNM and What decision is Kamal hassan going to take

கூட்டணி: அதிலும் பாஜக எதிர்ப்பினை தொடர்ந்து பதிவு செய்துவருவதால், அதிமுகவைவிட, திமுக - காங்கிரஸ் கூட்டணியே, கமலுக்கு சாதகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..

அதனால்தான், கமலுக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும், எப்படியாவது 2 இடங்களை, திமுக மேலிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதிலும் மய்யத்தினர் உறுதியாக இருக்கிறார்களாம்..

மக்கள் நீதி மய்யம்: அத்துடன், கூட்டணி பேச்சுவார்த்தையில் இதனை வலுவாக வலியுறுத்தவும் அவர்கள் முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது. எனினும், திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இடம்பெற்றுள்ளதால், புதிதாக இடம்பெற போகும் மய்யத்திற்கு, எத்தனை இடங்களை திமுக ஒதுக்கப்போகிறது என்றற எதிர்பார்ப்பும் நிலவியபடியே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

அதாவது, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது 100 சதவீதம் இறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம்.. மய்யத்துக்கு ஒரு சீட், அதுவும் கமல் போட்டியிட அந்த ஒரு சீட் முடிவாகியிருக்கிறது. அந்த வகையில், கோவையில் நிற்க விரும்புகிறார் கமல்ஹாசன்.. இது குறித்து ஸ்டாலினிடம் ஏற்கனவே அவர் தெளிவுப்படுத்தி விட்டார். ஸ்டாலினும் "நல்லது நடக்கும்" என்று மட்டும் அப்போது கமலிடம் சொல்லி வைத்தாராம்.

சிட்டிங் தொகுதி: காரணம், கோவை எம்.பி. தொகுதியானது, இடதுசாரிகள் வசம் இருக்கிறது. அவர்களிடமிருந்து சிட்டிங் தொகுதியை எடுக்க முடியுமா? என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் தற்போதைய கேள்வியாக இருக்கிறதாம். அதனால்தான், "ஆகட்டும் பார்க்கலாம்" எனும் பெருந்தலைவர் காமராஜர் பாணியில், நல்லது நடக்கும் என்றாராம்.

இந்த விஷயம் தெரிந்த சிபிஎம் தலைமையோ, "சிட்டிங் தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாது, தொகுதியில் நிறைய வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறோம், அதனால் தொகுதியை எங்களிடமிருந்து பறித்து விடாதீர்கள்" என்று ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறதாம்...

பெரம்பலூர்: அதனால், பெரம்பலூர் தொகுதியை கமலுக்கு ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக தெரிகிறது. இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. பெரம்பலூர் மாவட்டத்தில் அமைச்சர் சிவசங்கருக்கும், ஆ.ராசாவுக்கும், நீண்டகாலமாகவே, லோக்கல் பாலிடிக்ஸ் நிலவி வருகிறது.. இந்த உட்கட்சி பூசலுக்கு முடிவு கட்டவே, கமலிடம் பெரம்பலூர் தொகுதியை தள்ளிவிட ஒரு யோசனை திமுக தரப்பில் உள்ளதாம். இது குறித்து, கமலுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக திமுக தரப்பில் சொல்கிறார்கள்.

ஆனால், ஸ்டாலினின் இந்த யோசனையை கமல்ஹாசன் ஏற்கவில்லை என்கிறது மய்யம் தரப்பு. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் இப்படியான முரண்பாடுகள் நிலவிவரும் சூழலில்தான், சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளின்போது, வாழ்த்து சொன்ன முக்கியஸ்தர்கள் சிலரிடம், இதுகுறித்து பேசினாராம் கமல்.

கமல் விரும்பும் தொகுதி: அப்போது, "கமல் விரும்பும் தொகுதியை ஒதுக்குவதாக இருந்தால் திமுக சின்னத்தில் நிற்க சொல்லலாம், திமுக கொடுக்கும் தொகுதியில் கமல் போட்டியிட்டால், அவங்க கட்சியின் டார்ச் சின்னத்தில் போட்டியிடட்டும் என்று திமுக மேலிடத்தில் பேசிக்கொள்கிறார்கள்" என்று தனக்கு கிடைத்த ஒரு தகவலை சொல்லியிருக்கிறார் கமலுக்கு நெருக்கமானவர்.

அதற்கு, "தொகுதியும் சின்னமும் நாம் நினைப்பதுதான். இதில் திமுகவின் விருப்பத்தை திணிக்க அனுமதிக்க மாட்டேன். கவலைப்படாதீர்கள். இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் இதுவரை என்னிடம் பேசவில்லை... ஒருவேளை என்னிடம் பேசினால், பேசிக்கொள்கிறேன் என சொல்லியிருக்கிறாராம் கமல்" என்கிறார்கள் மய்யத்தினர்.

ஆக, கமலுக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்ன? எத்தனை சீட் என்பதெல்லாம் விரைவில் தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+