எடப்பாடி பழனிசாமியின் தகரும் கனவுகள்? 2 இரு துருவ அரசியலை உடைக்க போகும் விஜய்யின் X-Factor?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழலில் 16-வது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, இப்போது ஒட்டுமொத்த மாநிலமும் மே 4ம் தேதி ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது.. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக ஒரு முக்கிய "X Factor" ஆக உருவெடுத்துள்ளது. இதை பற்றிதான் பல்வேறு அரசியல் விமர்சகர்களும் தொடர்ந்து விவாதங்களில் பேசி வருகிறார்கள்.

தவெகவை பொறுத்தவரை வெறும் ரசிகர் மன்றங்களை மட்டுமே நம்பாமல், பூத் அளவில் வலுவான கட்டமைப்பை உருவாக்கியது அரசியல் வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.. குறிப்பாக 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தவெக அறுவடை செய்யும் என கணிக்கப்படுவதால், இது பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்..

Edappadi Palanisamy

மும்முனை போட்டி - யாருக்கு தமிழகம்

தமிழகத்தில் இதுவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன.. இந்த 2 கட்சிகளின் வாக்கு வங்கிகளும் பல ஆண்டுகளாக நிலையானதாகவே இருந்து வந்தன..

ஆனால் இந்த முறை விஜய்யின் வருகை, அண்ணாமலையின் பாஜக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வாக்கு சதவீதத்திலும் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.. இதுவரை மாற்று அரசியலை எதிர்பார்த்து காத்திருந்த நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகள் எங்கே விழுந்திருக்கும் என்பதுதான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது..

தவெக - எக்ஸ் ஃபேக்டர்

அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்த தேர்தல் அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும்.. பொதுவாக ஆளும் திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் தங்களை நோக்கி வரும் என்று அதிமுக தலைமை பலமாக நம்பியிருந்தது.. ஆனால், தற்போது அந்த வாக்குகள் தவெக-விற்குச் செல்லும் சூழல் உருவானால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்படலாம் என மதிப்பிடப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த வாக்கு பிளவு ஆளும் கட்சியான திமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.. இருந்தாலும் புதிய தலைமுறை வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக விஜய்யை ஆதரித்திருந்தால், அது திமுகவின் பலமான கோட்டைகளிலும் பெரும் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது..

இன்று மாலை 6:30 மணிக்கு மேல் எக்சிட் போல் (Exit Poll) முடிவுகள் வெளியாக உள்ளன.. ஆளும் திமுக கூட்டணி தனது மக்கள் நலத் திட்டங்களை, குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை மலைபோல் நம்பிக் காத்திருக்கிறது..

எடப்பாடி பழனிசாமி

எனினும் அதிமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது.. ஆனால், "மாற்றம்" என்ற ஒற்றை முழக்கத்துடன் களம் இறங்கிய விஜய்யின் தவெக யாருடைய வாக்குகளை அதிகம் பிரித்துள்ளது என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.. இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் விஜய்க்கு சாதகமாகத் திரும்பும் பட்சத்தில், அது தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றக்கூடும்..

அதிமுகவைப் பொறுத்தவரை, கொங்கு மண்டலம் போன்ற தங்களது கோட்டைகளைத் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.. ஆனால், திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுக மற்றும் தவெக இடையே பிரியும்போது, அது அதிமுகவின் வெற்றி வாய்ப்பிற்குப் பெரும் சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

கிங் மேக்கராக" உருவெடுக்கும் வாய்ப்பு?

இந்தத் தேர்தலில் விஜய்யின் தவெக ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது கள நிலவரம் மூலம் தெளிவாகிறது.. ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் "கிங் மேக்கராக" உருவெடுக்கும் வாய்ப்பும் உள்ளதாக அரசியல் அரங்கில் சலசலக்கப்படுகிறது.. இளைஞர்களின் வாக்குகள் யாருக்குச் சாதகமாக விழுந்துள்ளது என்பதே இந்த 2026 தேர்தலின் இறுதி முடிவைத் தீர்மானிக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+