எடப்பாடி பழனிசாமி கிட்ட 3 எழுத்து பிரபலம் இணைகிறாரா? அப்போ விஜய் ஓட்டு உடைகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - தவெக கூட்டணி அமையுமா? நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த 2 கேள்விகளும் பேசுபொருளாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி - விஜய் கூட்டணி முதல் தனுஷின் அரசியல் வருகை வரை, மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தனது பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார். அதேபோல விஜய்யின் வாக்குகளை தனுஷ் பிரிப்பாரா என்பது குறித்தும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அரசியல் களம் சேனலில் பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "காங்கிரஸ் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறிய விதத்துக்கும், விசிக நடந்துகொண்ட விதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. விசிக கடைசி நேரம் வரை திமுகவுடன் தொடர்பில் இருந்தது. அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் காங்கிரஸ் திடீரென வெளியேறிவிட்டது.

Edappadi Palaniswami 3-Letter Star Vijay Votes 3

திமுக - திருமாவளவன்

திருமாவளவன் திமுகவை விமர்சித்திருந்தாலும், தரக்குறைவாகப் பேசவில்லை. கூட்டணியில் இருந்தபோதே விஜய்யுடன் நெருக்கம் காட்டிய காங்கிரஸ் தலைவர்களை போலவும் அவர் நடந்துகொள்ளவில்லை. அதனால் விசிக மீண்டும் திமுகவுடன் இணைவதற்கான வாய்ப்பை முற்றிலும் நிராகரிக்க முடியாது.

அதேநேரத்தில், விசிகவும் தவெகவும் இணைந்தால், அது ஒரு பெரிய தலித் கூட்டணியாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பட்டியலின மக்கள் அல்லாத மற்ற சமூகத்தினர் இந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்தக் கூட்டணிக்கு எப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாமக - திமுக - விசிக

இந்தத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பாமக தோல்வியடைந்திருக்கிறது. இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்துக்கொண்டே இருக்க முடியுமா? அரசியலில் ஒரு கட்டத்தில் தேர்தல் களத்தில் இறங்க வேண்டியிருக்கும். அதனால் பாமக தனது அரசியல் வாய்ப்புகளைத திறந்து வைத்திருப்பதைப்போல, விசிகவும் இரு தரப்புடனான வாய்ப்புகளை ஆராய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

திமுக கூட்டணியில் இருந்துகொண்டே பாமகவுடன் பேசினால், அதற்குப் பதிலாக விசிகவும் தனது அரசியல் வாய்ப்புகளைத் திறந்து வைக்கலாம் என்று திமுக நினைக்கக்கூடும். திமுகவைப் பாராட்டிப் பேசுவதன் மூலமும் தனது அரசியல் நிலைப்பாட்டை விசிக வெளிப்படுத்தலாம். ஆனால் அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது.. நிரந்தர நண்பரும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி - விஜய்

எடப்பாடி பழனிசாமி, தவெகவுடன் கூட்டணி வைப்பாரா என்று கேட்கிறீர்கள்.. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரை நேரடியாகவும் கடுமையாகவும் விமர்சித்து பேசுகிறார். குதிரை பேர அரசியல், நிர்வாக திறமையின்மை எனக் குற்றம்சாட்டிவிட்டு, விஜய்யுடன் எப்படி கூட்டணி அமைப்பார்? அப்படிச் சேர்ந்தால் அவரது அரசியல் மதிப்பு குறையக்கூடும். அவர் பேசுவதைப் பார்த்தால், கூட்டணிக்குச் செல்வதைவிட மோதலுக்கு தயாராவதுபோல தெரிகிறது.

இப்போது யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்று பேசிக்கொண்டிருப்பதைவிட, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், தவெகவுடன் கூட்டணி அமைப்பதைவிட ஒவ்வொரு கட்சியும் தனது சொந்தக் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ராஜேந்திர பாலாஜி, தனுஷ்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றும், அவர் தவெகவில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். தனுஷ் இதுவரை அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேபோல், ரஜினிகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பதும் முக்கியம். தனுஷ் இப்போதுதான் அரசியல் விவாதத்தில் இடம்பெற தொடங்கியிருக்கிறார். அவர் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு எப்போது பேசுவார் என்பது தெரியவில்லை.

தனுஷ் அரசியலுக்கு வருவதாகப் பேசப்படுவது, அரசியல் விவாதத்தை உருவாக்குவதற்காகவும் இருக்கலாம். ஆனால் அவர் உண்மையிலேயே அரசியலுக்கு வந்தாலோ, தனியாகக் கட்சி தொடங்கினாலோ அல்லது ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்தாலோ, விஜய்யின் வாக்குகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

திமுக, அதிமுக வாக்குகள்

ரசிகர்களின் ஆதரவு ஒரு தலைவரிடமிருந்து இன்னொரு தலைவருக்கு மாறுவது அரசியலில் இயல்பானதுதான். திமுகவின் வாக்குகள் அதிமுகவுக்கு மாறுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். விஜய்யின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தனுஷுக்கு ஆதரவளிப்பது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கலாம்.

"அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள், இந்தத் தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டீர்களா?" என்று தனுஷ் தரப்பினர் கேட்கலாம். அப்படி நேரடியாக விஜய்யை விமர்சிக்காமலேயே அவருடைய ஆதரவாளர்களைக் கவர முடியும்.

தனுஷுக்கு ஏற்கெனவே இளைஞர்கள் மத்தியில் ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர் புதிய இசை முயற்சிகளுடனும் தனித்துவமான அடையாளத்துடனும் அரசியலுக்கு வந்தால் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தனுஷின் அரசியல் வருகை உண்மையானால், அது விஜய்யின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியை ஈர்க்கக்கூடும். அப்படி நடந்தால் தமிழக அரசியலில் புதிய விவாதங்கள் உருவாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+