சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னங்க சொல்றீங்க.. எச்.ராஜா தலைவரா.. தமிழக பாஜகவுக்கு கடும் போட்டா போட்டி!

தமிழக பாஜக தலைமை பதவிக்கு எச்.ராஜா போட்டி என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஆயிரம் சொல்லுங்க.. எச்.ராஜாவுக்கு தமிழக பாஜக தலைவர் பதவி மேல ஒரு கண்ணு இருக்கத்தான் செய்யுது.

தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கினார் அதை ஏற்க தயார் என்று கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாசமே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் சொல்லி இருந்தார். இந்த முறையும் அதையேதான் சொன்னார்.

அதற்கேற்றபடி தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில் எச்.ராஜாக்கும் அந்த வாய்ப்பு அதிகமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

பொறுப்பு

பொறுப்பு

தமிழக பாஜக தலைவராக தமிழிசை கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருந்துவருகிறார். 2 முறை இவர் இந்த பொறுப்பில் இருக்கிறார். அதாவது 5 வருஷத்துக்கும் மேலாக தலைவர் பதவியில் உள்ளார். 2014-ல் தமிழக பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகிவிட்டதால், அந்த பொறுப்பு தமிழிசைக்கு போனது.

ராஜா

ராஜா

இப்போது தமிழிசையின் பதவிக்காலம் முடிவடைவதால், ஏகப்பட்ட போட்டிகள் ஏற்பட்டுள்ளன. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், நடிகர் எஸ்.வி.சேகர், பொன்.ராதா போன்ற தலைகளின் பெயர்கள் அடிபட்டாலும் எச்.ராஜா பெயரும் சேர்ந்தே அடிபடுகிறது.

பலமான போட்டி

பலமான போட்டி

மக்களவையில் போட்டியிட்டபோதும் எச்.ராஜா பெயர்தான் முதலில் அடிபட்டது. அதேபோல, பாஜக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினருக்கான பெயர் அடிபடும்போதும் எச்.ராஜா பெயர்தான் அடிபட்டது. இப்போது தமிழக தலைவர் பதவிக்கும் எச்.ராஜா பெயர் அடிபட்டு வருகிறது. ஆக மொத்தம்.. எச்.ராஜா பாஜகவின் தவிர்க்கவே முடியாத ஒரு சக்தி ஆவார்.

பொறுப்பு

பொறுப்பு

இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றால்.. ரொம்ப சிம்ப்பிள்.. திராவிட அரசியலுக்கு எதிராக வலுவான கருத்துகளை எடுத்து வைத்து வருவதாக கூட இருக்கலாம் அல்லது மத, இன ரீதியான உணர்வுகளில் அதிக கவனம் செலுத்தி கருத்துக்களை சொல்வதாககூட இருக்கலாம் என்கிறார்கள். அதனால் எச்.ராஜாவுக்கென்று ஒரு ஆதரவு கட்சிக்குள் இருக்கவே செய்கிறது. அதனால் அவரை தமிழக தலைமை பொறுப்பில் உட்கார வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

English summary
Sources say that, BJP National Secretary H.Raja will get the chance to become the TN BJP chief
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X