சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமாக வருகிறது.. வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: வடஇந்தியாவை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் தாக்குதல் நடத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது. விவசாயிகள் பலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர் .

Recommended Video

    வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா?

    வடஇந்தியாவில் பல மாநிலங்களில் locust swarms attack எனப்படும் வெட்டுக்கிளி தாக்குதல் புரட்டி போட்டுள்ளது. முக்கியமாக ராஜஸ்தானில் இருக்கும் 7 லட்சம் ஏக்கர் நிலங்களில் இருக்கும் பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் மொத்தமாக தின்று தீர்த்து இருக்கிறது.

    locust swarms attack என்பது அளவில் பெரிதாக இருக்கும் ஒரு வகை வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களில் தாக்குதல் நடத்துவது ஆகும். பொதுவாக வெயில் காலங்களில் ராஜஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

    88% பேருக்கு அறிகுறியே இல்லை.. ஆனாலும் கொரோனா.. தமிழகத்தின் நிலை இதுதான்.. ஷாக்கிங் பின்னணி!88% பேருக்கு அறிகுறியே இல்லை.. ஆனாலும் கொரோனா.. தமிழகத்தின் நிலை இதுதான்.. ஷாக்கிங் பின்னணி!

    அதிக வெப்பம்

    அதிக வெப்பம்

    பொதுவாக இந்த வெட்டுக்கிளிகள் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் வேகமாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சி அடையும். மத்திய கிழக்கு நாடுகளில் மார்ச் இறுதியில் இந்த வெட்டுக்கிளிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்து பாகிஸ்தான் வழியே இந்தியாவிற்கு உள்ளே வரும். இந்தியாவிற்கு உள்ளே பயிர்களை நாசம் செய்துவிட்டு, பின் பறந்து சென்றுவிடும்.

    எங்கே வரும்

    எங்கே வரும்

    பொதுவாக இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் வரைதான் அதிகமாக வரும். அங்குதான் வெயில் அதிகம் உள்ளது என்பதும், கோதுமை விளைச்சல்களும் இதற்கு முக்கிய காரணம். ஆனால் இந்த முறை வடஇந்தியாவில் 5 மாநிலங்களை வெட்டுக்கிளிகள் தாக்கி இருக்கிறது. மொத்தமாக 8 லட்சம் ஏக்கர் நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளது.

    என்ன வேகம்

    என்ன வேகம்

    தற்போது மகாராஷ்டிரா வரை கூட இந்த வெட்டுக்கிளிகள் வந்துள்ளது. ஒரு நாளுக்கு 180 கிமீ தூரம் இந்த வெட்டுக்கிளிகள் பறக்கிறது. ஒரு குழுவில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். இவை விவசாய நிலங்களுக்கு மட்டும் செல்லாது. உங்கள் வீட்டிலும் வந்த சுவற்றில் கூட்டம் கூட்டமாக நிற்கும். மொத்தமாக பொது இடங்களில் பறந்து மக்களை துன்புறுத்தும்.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    ஒவ்வொரு முறையும் அதிக சக்தியோடு இந்த வெட்டுக்கிளிகள் வருகிறது. இதை ஒவ்வொரு முறையும் அழிப்பது மிகவும் கடினமான காரியமாக மாறுகிறது. இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தை தாக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கு முன் இந்த வெட்டுக்கிளிகள் இடம்மாறி சென்று விடும். அல்லது அழிக்கப்பட்டுவிடும். தமிழகத்தை இது நெருங்காது என்று கூறுகிறார்கள்.

    ஆபத்து கிடையாது

    ஆபத்து கிடையாது

    இந்த வெட்டுக்கிளிகள் வேகமாக பறந்து செல்கிறது. ஆனால் தமிழகத்தை தாக்கும் அளவிற்கு இது பயணம் செய்யாது. அதன் உணவு தேவை அதற்கு முன் சரியாக வாய்ப்புள்ளது. எப்போதுமே இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தை தாக்கியது இல்லை. தென்னிந்தியாவின் வேறு பகுதிகள் எதையுமே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியது இல்லை. அதனால் நாம் அச்சப்பட வேண்டாம்.

    English summary
    Will locust swarms attack come to Tamilnadu? What is the truth?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X