• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"சீக்ரெட்".. அமித்ஷாவை சந்திக்கவிருக்கும் விஐபி.. தயாரான ரகசிய இடம்?.. தகிக்கும் தமிழக அரசியல்..!

|

சென்னை: இந்த முறை அமித்ஷாவின் சென்னை வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவரை யாரெல்லாம் சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

திமுகவை தோற்கடித்து, அதிமுக கூட்டணியை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதிலும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் பாஜக இந்த முறை வெற்றியை பெற வேண்டும் என்பதிலும் அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார்.

இது ஒன்றுதான் இந்த முறை அமித்ஷாவின் வருகை உற்றுநோக்க காரணமாக இருந்து வருகிறது. இதற்காக அமித்ஷா யார் யாரை சந்தித்து பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி வரும்நிலையில்தான் யூகங்களின் அடிப்படையில் சில விஷயங்கள் கசிந்து வருகின்றன.

 வீடியோ கால்

வீடியோ கால்

முதலாவதாக, ரஜினி - அமித்ஷா சந்திப்பு பற்றின பேச்சு அடிபடுகிறது.. திமுகவை வீழ்த்துவதற்கு ரஜினியே மிகப்பெரிய பலமாக இருப்பார் என்று பாஜக தலைமை குறிப்பாக அமித்ஷாவே நம்புகிறார்.. அதனால் ரஜினியை சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.. இவர்களின் அந்த சந்திப்பு நடைபெறும் இடம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.. ஒருவேளை நேரில் சந்திக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் வீடியோ கால் மூலமாகவாவது ரஜினியுடன் பேச அமித்ஷா முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

அழகிரி

அழகிரி

அடுத்ததாக, அழகிரியின் சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.. அழகிரியை பாஜகவில் இணையும்படி பல முறை நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.. டெல்லி மேலிட தலைவர்கள் இதற்காகவே அழகிரியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியும், தங்கள் விருப்பத்தை தெரிவித்த வந்தபடியும் உள்ளனர்..அதாவது அழகிரியை உள்ளே கொண்டுவந்தால் திமுக டேமேஜ் ஆகும் என்பதாலேயே இந்த காய் நகர்த்தல் நடந்து வந்தது.

 சரத்குமார்

சரத்குமார்

இதற்கடுத்து சரத்குமாரும் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. சரத்குமாரை பொறுத்தவரை பிரதமர் மோடியின் மீது மிகுந்த பிரியமும், மரியாதையும் வைத்திருப்பவர்.. தற்போது, பாஜகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யவும் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.. ஏற்கனவே, தன்னுடைய கட்சியை கூண்டோடு கலைத்துவிட்டு, பாஜகவில் ஐக்கியமாவதாக ஒரு செய்தி கசிந்தபடியே இருந்த நிலையில், அதை சரத்குமார் மறுத்திருந்தார்.. ஆனால், இன்று லீலா பேலஸ் ஓட்டலில் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், சமகவை விரைவில் தாமரையுடன் சேர்த்து பார்க்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

சந்திப்பு

சந்திப்பு

அதற்கேற்றபடி, எல்.முருகனும் அழகிரி வந்தால் வரவேற்போம் என்று நேரடியாகவே அழைப்பு விடுத்திருந்ததால், அமித்ஷா அழகிரி சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மதுரையில் இருந்து அழகிரி காரில் இன்று சென்னை கிளம்பி வர இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. சுருக்கமாக சொல்ல போனால், திமுகவில் ஓரளவுக்காவது பிளவை ஏற்படுத்தி அதை பலவீனப்படுத்த முடியும் என்பதே பாஜகவின் கணக்கு.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இதெல்லாம் சீக்ரெட் சந்திப்புகளாகவே கருதப்பட்டாலும், வெளிப்படையான சந்திப்புகள் சில நிகழ உள்ளது.. அதன்படி, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட விவசாய அணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கம், அமித் ஷாவை சந்திக்கவுள்ளார்.. முக அழகிரி ஆதரவாளரான திமுகவின் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி. ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். மேலும் அமித்ஷா முன்னிலையில் பலரும் பாஜகவில் இணையலாம் என்றும் சொல்லப்படுகின்றன.

ஓட்டல்

ஓட்டல்

ஆக, எந்த சீக்ரெட் சந்திப்புகளாக இருந்தாலும், அமித்ஷா ஓட்டலை விட்டு வெளியே வரபோவதில்லை.. அவரது அதிகாரப்பூர்வமான கட்சி நிகழ்ச்சிகளை தவிர, வேறு எங்கும் வெளியே சென்று யாரையும் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை.. அதனால் யார் அமித்ஷாவை சந்திக்க நேர்ந்தாலும், அது ஓட்டலுக்குள்ளேயேதான் நடக்கும் என்று தெரிகிறது.. இல்லையானால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கலாம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Will Meet Amit shah's Meet Rajinikanth and Azhagiri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X