Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 பெண்கள்".. இவர் "அங்கே" போக போகிறாரா?.. திமுகவை உரசினாலே டக்கென திரும்பும் டெல்லி.. பரபர பாஜக

திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க சசிகலா ராஜதந்திரம் ஒன்றை துவக்கி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம், சசிகலா தந்த பேட்டியின் அதிர்வுகள் இன்னமும் களத்தில் அடங்கவில்லை.. இதற்கு சில காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப காலமாகவே சசிகலா நிறைய பேட்டிகளை தந்து வருகிறார்.. அந்த வகையில், நேற்றைய தினமும், செய்தியாளர்களை சந்தித்த சசிகலா திமுகவை கடுமையாக விமர்சித்து பேட்டி தந்தார்.

"தமிழகம் முழுவதும் ரவுடிகள் சாலையோரம் உள்ள கடைகளில் கட்டாயம் பணம் வசூல் செய்து வருகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டு உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

ஆனால் இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் திமுக அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வருகிறது. திமுகவினர் திராவிட மாடல் என கூறி வருகின்றனர். ஆனால் இப்போது வரை எனக்கு திராவிட மாடல் என்றால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.. 400க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுகவினர் செயல்படுவதாக சொல்லி வருகிறார்கள். ஆனால் இவையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஹெல்ப் - திமுக

ஹெல்ப் - திமுக

அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று ஒன்றை மட்டும் சொல்கிறேன். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாகவோ அல்லது திமுகவினருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாக இருக்கக்கூடியவர்களாக இருக்கக்கூடும். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடினால் கட்சியை காப்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர இருப்பவர்களை விரட்டியடித்து கட்சியை பலவீனப்படுத்த மாட்டார்கள்.

நடுங்கும் கூடாரம்

நடுங்கும் கூடாரம்

இதுபோன்ற ஒருசிலரை பார்க்கையில், கட்சிக்கு எதிரான திட்டங்களை மனிதில் வைத்து செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அன்று இரண்டே பெண்கள் கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டினோம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை புறம்தள்ளிவிட்டு உங்கள் நேரத்தை கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். சசிகலா இப்படி பேட்டி தந்ததுமே, அதிர்ந்துபோனது திமுக மட்டுமல்ல, அதிமுக கூடாரமும்தான்..

பாஜக

பாஜக

இதற்கெல்லாம் என்ன காரணம்? சிறையில் இருந்து வெளிவந்ததில் இருந்தே, சசிகலா தலையெடுப்பதை பாஜக விரும்பவில்லை என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.. காரணம், சசிகலாவுக்கு தென்மண்டலங்களில் மட்டுமே ஆதரவு இருப்பதால், அவருக்கு சப்போர்ட் செய்வதிலும் பாஜகவுக்கு ஒரு தயக்கம் இருந்து வருவதாக தெரிகிறது.. அதனால்தான், தன்னுடைய இந்த மைனஸையே சசிகலா தரப்பு, பிளஸ் ஆக மாற்றும் முயற்சியில் சசிகலா இறங்கி விட்டராம்..

நொறுங்கும் கணக்கு

நொறுங்கும் கணக்கு

மேலும், திமுகவை முன்பைவிட வெளிப்படையாகவே டேமேஜ் செய்ய துவங்கிவிட்டார்.. அதாவது திமுகவை விமர்சிப்பதன் மூலம், பாஜகவின் ஆதரவு தன் மீது திரும்பும் என்றும் கணக்கு போடுகிறாராம். இன்னும் ஓபனாக சொல்லப்போனால், அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, திமுகவுக்கு டஃப் தரும் ஒரே தலைவராக தன்னை உயர்த்தி கொள்ளும் பகீரத முயற்சியில் சசிகலா இறங்க விட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

கொட்டு வைத்த சசிகலா

கொட்டு வைத்த சசிகலா

இதனிடையே, நேற்றைய திமுகவை விமர்சித்துவிட்டு, அதிமுக தலையிலும் ஒரு கொட்டு வைத்துள்ளார் சசிகலா.. எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடாதபோதும், மறைமுகமாகவே பேட்டியில் அட்டாக் செய்துள்ளதும், அதிமுக கூடாரத்துக்கு கலக்கத்தை தந்துவருகிறது.. இப்படித்தான், சில தினங்களுக்கு முன்பு சசிகலா தன்னுடைய பேட்டியில், "அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னிடம் தொடர்பில் உள்ளனர்"என்று ஒரே போடாக போட்டார்.

அதிமுக

அதிமுக

இதற்கே இன்னும் அதிமுகவுக்கு விடை தெரியவில்லை.. அவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பதை அறிய, ஒரு தனி டீமை எடப்பாடி தரப்பு உள்ளே இறக்கி விட்டுள்ளதாக கூறப்பட்டது.. ஆனால், நேற்றைய தினம் பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசியது மேலும் எரிச்சலை அதிமுகவுக்கு கூட்டி உள்ளது.. அதனால்தான், இன்றைய தினம் ஜெயக்குமார், சசிகலாவுக்கு எதிராக உடனடியாக வந்து பதிலடி தந்துள்ளார்.. சசிகலா பாஜகவில் வேண்டுமானால் இணையலாம், இங்கே ஹவுஸ்புல் என்கிறார்.

நயினார்

நயினார்

அதிமுகவில் இடம் இல்லை என்று சொல்லலாமே தவிர, பாஜகவில் சேரலாம் என்று ஜெயக்குமார் ஏன் சொல்ல வேண்டும்? ஒருவேளை நயினார் நாகேந்திரன் சொன்னதுபோல், பாஜகவில் சேர்த்து கொள்வார்களா என்று தெரியவில்லை.. ஆனாலும், திமுக அரசை, சசிகலா தொடர்ந்து விமர்சித்து வருவதை பாஜகவும் கவனிக்க ஆராம்பித்துள்ளதாம்.. சசியின் இந்த புது அதிரடிகளை, எடப்பாடி பழனிசாமி சமாளிக்க வேண்டி உள்ளது, திமுகவும் உற்றுநோக்க வேண்டி உள்ளது, பாஜகவும் தொடர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.. இந்த ராஜதந்திரம் ஒர்க் அவுட் ஆகிறதா என்று பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+