அம்மா உணவகம் மூடப்படுமா? சட்டசபையில் ஸ்டாலின் சொன்ன உறுதியான பதில்.. அதிமுகவினருக்கு சரமாரி பதிலடி
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அம்மா மினிகிளினிக்கை மூடியது ஏன் என்பதற்கான காரணத்தையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகளை மூடியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சட்டசபையில் இன்று விளக்கம் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், மினி கிளினிக்குகளில் எதுவுமே இல்லாமல் போனதால்தான் மூடப்பட்டதாக தெரிவித்தார். அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சட்டசபையில் உரையாற்றினார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
திருவள்ளூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும், போக்சோ குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் யாராக இருந்தாலும் தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதோடு, அதுதொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மினி கிளினிக் மூடியது ஏன்
அம்மா கிளினிக் என்று பெயர் வைக்கப்பட்டதே தவிர, கிளினிக் செயல்படவில்லை, இல்லாத கிளினிக்கை எப்படி மூட முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். புதிதாக கட்டப்பட்ட தமிழக சட்டசபையை மருத்துவமனையாக மாற்றியது யார் என்று கேட்ட முதல்வர், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கியது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் என்று குற்றம் சாட்டினார்.

அம்மா உணவகம் மூடப்படாது
சமத்துவபுரங்கள், நமக்கு நாமே திட்டங்களை முடக்கியது யார்?, சென்னையில் அண்ணா நினைவு நூலகத்தை செயல்படாமல் முடக்கியது யார்? என அதிமுகவினருக்கு கேள்வி எழுப்பினார். எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன். இன்று வரை அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நிச்சயம் இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

அனைவரும் விரும்பும் பள்ளிகள்
ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று கூறிய முதல்வர், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு அரசு பள்ளிகளை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறிய முதல்வர், அரசு பள்ளிகளை அனைவரும் விரும்பும் பள்ளிகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டம்
இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 5,274 பேர் பயன்பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 43.61 கோடி பேர் பயனடைந்துள்ளனர். சென்னையில் பலத்த மழை பெய்தபோது நள்ளிரவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் விளக்கமளித்தார்.
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications