ஒரே சர்ப்ரைஸ்.. சென்னையில் திடீரென பெய்த மழை... சட்டென்று மாறிய வானிலை
சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.
சென்னை: சென்னை நகரின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் சாரல் மழையால் குளுமையான காற்று வீசி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. டிசம்பர் மாதம் மழை ஓய்வெடுக்கவே குடியிருப்பகளை சூழ்ந்த வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியது.

சில வார ஓய்வுக்குப் பிறகு சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் அறிவித்தது போலவே இன்று காலை முதலே சென்னையில் மேக மூட்டம் காணப்பட்டது. தி.நகர், தேனாம்பேட்டை, மெரீனா கடற்கரை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் சாரல் மழையால் சென்னையில் குளுமையான காற்று வீசி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications