நடுத்தெருவில்.. நைட்டியுடன் பற்றி எரிந்து.. கருகிய லீமா ரோஸ்.. சூளைமேட்டில் பயங்கரம்!

தீ விபத்தில் இளம்பெண் கருகி உயிரிழந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடுதெருவில் நைட்டியுடன் பற்றி கொண்டு எரிந்தார் லீமா ரோஸ்.. தெருவில் இருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்த கேபிள் பாக்ஸ் வெடித்து சிதறியபோது, எதேச்சையாக வந்து கொண்டிருந்த பெண் இந்த தீயில் கருகியேவிட்டார்!!

சென்னை சூளைமேடு புதிய மேற்கு தெருவைச் சேர்ந்த தம்பதி ஜேம்ஸ் - லீமா ரோஸ்.. லீமாவுக்கு 35 வயதாகிறது. இவர், மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்.. அந்த மளிகை வீட்டு பக்கத்திலேயே உள்ளது.. அதனால் நைட்டியுடனே கடைக்கு சென்றார்.

woman died in electric transformer fire accident in chennai

ஆண்டவர் தெரு ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியில் இருந்த கேபிள் திடீரென வெடித்து சிதறியது.

பிறகு அடுத்தடுத்த செகண்டுகளில் அந்த கேபிள் எரிந்து, தீப்பொறிகள் வெளியே சிதறி அந்த தெரு முழுவதும் பரவியது.. அந்த சமயத்தில்தான் லீமா ரோஸ் நடந்து வந்து கொண்டிருந்தார்.. பரவயி சில தீப்பொறிகள் லீமா ரோஸ் மீது விழுந்தது. நைலான் நைட்டியை அவர் அணிந்திருந்தார்.

அதனால் தீ வேகவேகமாக நைட்டியில் பற்றிக் கொண்டு, பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.. இதனால் வலி தாங்க முடியாமல் லீமா கதறினார்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து தண்ணீரை அள்ளி அவர் மீது ஊற்றினர்.

மேலும் தெருவில் கிடந்த மண்ணை வாரி வாரி இறைத்து தீயை அணைக்க முயன்றனர்.. ஆனால், அதற்குள் லீமாவின் உடலில் கிட்டத்தட்ட 80 சதவீதம் கருகிவிட்டது. உடனடியாக அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனாலும் கொஞ்ச நேரத்திலேயே லீமா ரோஸ் உயிர் பிரிந்தது.

இது குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. லீமா ரோஸ் நைலான் நைட்டி அணிந்திருந்ததாலேயே தீ வேகமாக பரவி உயிரிழப்பு வரை சென்றிருப்பதாக கருதுகிறார்கள்.. இந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+