ஆன்லைன் ரம்மி ஆடி 20 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை இழந்த இளம்பெண்..கடன் தொல்லையால் தற்கொலை
ஆன்லைன் ரம்மி ஆடியதால் கடனில் சிக்கிய பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதோடு பல லட்சம் கடன் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் பவானி என்பதாகும். 29 வயதான பவானி சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
சென்னை கந்தன்சாவடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பவானி நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் ரம்மி
பவானி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் நிறுவன ஊழியரான பவானி என்பவர் வேலைக்கு ரயிலில் செல்லும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் மற்றும் கணவர் கண்டித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி பவானி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

நகை, பணத்தை இழந்த பவானி
ரம்மி விளையாட்டில் 20 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. துவரை 20 சவரன் நகைகளை விற்று ரம்மி விளையாடியதும் மேலும், தமது சகோதரிகள் இருவரிடம் தலா ஒன்றரை லட்சம் என 3 லட்சம் கடன் பெற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண் தற்கொலை
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த தகவலை தந்தையிடம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில் நேற்று குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் தற்கொலை என்பதால் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தற்கொலைகள்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறதுது. இது உடனடியாக தடை செய்ய வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் 2 குழந்தைகளின் தாய் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications