சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதுகு வலியா.. கழுத்து வலியா.. கொஞ்ச நாளாவே அதிகமாகுதா? மேட்டர் இதுதான்.. குணப்படுத்த டிப்ஸ் இருக்கு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் அனைவரின் வாழ்க்கையையும் பல வழிகளில் பாதித்துள்ளது. முக கவசம் அணிவது முதல் ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் இருந்தே வேலை பார்ப்பது வரை..

2020ம் ஆண்டு இந்தியா கண்ட மிகப்பெரிய மாற்றம் வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH). COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த, மக்கள் பணியிடங்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கினர். இந்த மாற்றம், மக்களின் உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

உட்காரும் நிலையில் மாற்றம், மோசமான பொஷிஷன், பணிச்சூழலியல் ஒரு அமைப்பாக இல்லாமை, நீண்ட நேரம் உட்கார்ந்து பணி கொள்வது போன்ற பல காரணங்கள் இதன் பின்னால் உள்ளன.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிகரித்துள்ள உட்காரும் தன்மை மற்றும் மோசமான தோரணை, தசைக் கோளாறுகள், குறிப்பாக அடி முதுகு பகுதியில் வலி மற்றும் கழுத்து வலி ஆகியவை மக்களிடையே அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதியான நாற்காலிகள்

வசதியான நாற்காலிகள்

"வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது பணியிடங்கள் போல நமக்கு வசதியான நாற்காலி வசதி இருக்காது. கிடைத்த ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்கிறார் பிரபல எலும்பு நிபுணர் ஆஷிஸ் ஜெயின். மேலும் அவர் கூறுவதை பாருங்கள்.

பிரேக் எடுங்க

பிரேக் எடுங்க

பணியிடத்தில் அவ்வப்போது நாம் எழுந்து சென்று பிரேக் எடுத்துக் கொள்வோம். வீட்டில் அதை நாம் மறந்து விடுவோம். இதன் காரணமாகவும், உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. உடலுக்கு மட்டுமல்லாது, மனதுக்கும் இதன் பாதிப்பு போகிறது. உடலை பொருத்தளவில் கழுத்து மற்றும் முதுகுப் பகுதிதான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

திடீர் ஓய்வு

திடீர் ஓய்வு

இதற்கு முந்தைய கால கட்டங்களில், அதிகமாக உடல் உழைப்பு செய்தவர்கள் திடீரென ஓய்வில் இருக்க ஆரம்பித்துள்ளது மற்றவர்களை விடவும் அவர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கூறும் அந்த டாக்டர் இந்த வலியிலிருந்து விடுதலை பெறுவதற்கான சில வழிமுறைகளையும் தெரிவிக்கிறார்.

டிப்ஸ்

டிப்ஸ்

ஆரம்ப கட்டத்திலேயே இதுபோன்ற வலி இருப்பதை உணர்ந்து கொண்டால், அதை நீக்கி விடலாம். அலுவலகத்தில் நீங்கள் எப்படி உட்கார்ந்து இருப்பீர்களோ அதே போன்றுதான் கால்களை தொங்க போட்டு நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் பள்ளியில் எப்படி உட்கார்ந்து இருப்பார்களோ அதேபோல உட்காரவைத்து பழக்குங்கள்.

நல்ல இடத்தை பிடிங்க பாஸ்

நல்ல இடத்தை பிடிங்க பாஸ்

படுக்கை அறையிலிருந்து அல்லது வரவேற்பு அறையில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது நல்ல சூழ்நிலையாக இருக்காது. வேலை செய்வதற்காக தனி இடத்தை தேர்ந்தெடுங்கள். சரியான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் இவ்வாறு தெரிவிக்கிறார்.

English summary
Year end 2020: Most common health problem is back pain and neck pain for who are working from home due to corona spreads. Here are the tips to overcome the body pain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X