"கண்ணை மூடுங்க.. ஒன்னு காட்ட போறேன்" ஆசை காட்டி அம்மன் சேகரை கொன்ற பெண்.. பகீர் வாக்குமூலம்
கற்பூர வியாபாரியை கொன்ற பெண் வாக்குமூலம் தந்துள்ளார்
சென்னை: "என்னை தவிர உன்னை எவனும் தொடக்கூடாது.. நானே உன்னை 2-வதாக கல்யாணம் பண்ணிக்கிறேன்"னு அங்கிள் சொன்னார்.. அதனாலதான் அவரை கொலை செய்தேன் என்று இளம்பெண் வாக்குமூலம் தந்துள்ளார்.
திருவொற்றியூரை சேர்ந்தவர் அம்மன் சேகர்.. இவர் ஒரு கற்பூர வியாபாரி. 59 வயதாகிறது.. இவரது சேகரின் மகள் மோனிகாவும் திருவொற்றியூரை சேர்ந்த பவித்ராவும் நெருங்கிய தோழிகள்.. இதனால் மோனிகாவை பார்க்க வீட்டுக்கு வரும்போதுதான், சேகர் அறிமுகமாகி உள்ளார். பவித்ராவுக்கு 22 வயதாகிறது.
தோழியின் அப்பா என்பதால் உரிமையாக பழகினார் பவித்ரா... நிறைய செல்பிகள், போட்டோக்களை ஒன்றாக சேர்ந்து எடுத்து கொண்டுள்ளனர்.

செல்போன்
ஆனால் அடிக்கடி வீட்டிற்கு வருவதை பயன்படுத்தி தொல்லை கொடுத்து வந்ததாகவும், பவித்ராவின் அரைகுறை போட்டோக்களை செல்போனில் எடுத்து வைத்துக் கொண்டு, அதை காட்டியே 5 வருடமாக சேகர் மிரட்டி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

சேகர்
ஆனால், பவித்ராவுக்கு வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்யவும், சேகருடன் பேசுவதை குறைக்க ஆரம்பித்தார்.. இது சேகருக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. பழைய மாதிரியே பேசணும்.. நெருக்கமாக இருக்கணும் என்று கட்டாயப்படுத்தவும் பவித்ரா அவரை கொல்ல முடிவு செய்துள்ளார். அதற்காக கடந்த டிசம்பர் 23-ம் தேதி சேகரின் பிறந்த நாளுக்கு பரிசு தர வேண்டும் என்று சொல்லி நேரில் வரவழைத்தார் பவித்ரா.

ஃபெவிகுவிக் பசை
"கண்ணை மூடிக்குங்க.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தர போறேன்.." என்று பவித்ரா சொல்லவும், சேகர் கண்ணை ஆசை ஆசையாக மூட... ஃபெவிகுவிக் பசையை சேகரின் வாயில் ஊற்றிவிட்டு, கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டார் பவித்ரா. இந்த சம்பவம் தொடர்பாக பவித்ராவை போலீசார் கைது செய்தனர். இது சம்பந்தமாக பவித்ரா போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார். அப்போது அவர் சொன்னதாவது:

மேக்கப் செட்
"என் அப்பா மெடிக்கல் ஷாப் வெச்சிருக்கார்.. நான் பிகாம் படிச்சிருக்கேன்.. என் ஃப்ரண்ட் அப்பதான் சேகர்.. அங்கிள், அங்கிள் என்றுதான் கூப்பிடுவேன்... ஒரே பகுதியில்தான் எங்கள் வீடு இருந்தது.. அதனால அடிக்கடி அவங்க வீட்டுக்கு போவேன்.. அங்கிள் எனக்கு போன் பண்ண ஆரம்பித்தார்.. நான் என்ன கேட்கிறோனோ, அதையெல்லாம் உடனே கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கி தந்துடுவாரு.

சண்டை போடுவார்
எனக்கு டிரஸ், மேக்கப் செட் நிறைய வாங்கி தந்திருக்காரு.. என்ன ஃபுட் கேட்கிறோனோ அதையும் ஆர்டர் பண்ணி வாங்கி தந்துடுவாரு.அதனால எனக்கு அவரை ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனால் நாள் ஆக ஆக, அங்கிளின் நடவடிக்கை மாற ஆரம்பிச்சுடுச்சு.. எங்களின் நெருக்கத்தை கண்ட எங்கள் இரு குடும்பத்தினரும் கண்டித்தனர்.. அதேமாதிரி, நான் மற்ற ஆண்களிடம் பேசினால் அங்கிளுக்கு பிடிக்காது.. சண்டை போடுவார்..

2-வது கல்யாணம்
இப்போ என் வீட்டில் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதை கேள்விப்பட்டதும், "என்னை தவிர உன்னை எவனும் தொடக்கூடாது.. நானே உன்னை 2-வதாக கல்யாணம் பண்ணிக்கிறேன்"னு அங்கிள் சொன்னார். நான் வயசு வித்தியாசத்தை சொல்லி அதுக்கு மறுப்பு சொன்னேன்.. அப்போதான், என் வீடியோ, போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுடுவேன்னு மிரட்டினார்.

கண்ணீர்
அதுக்குதான் அவரை கொல்ல முடிவு பண்ணேன்.. டிசம்பர் 24-ம் தேதி அவருக்கு 60-வது பர்த்டே.. அதனால 23-ம் தேதி இரவு அவருக்கு கிஃப்ட் தரபோறேன்னு சொல்லி வரவழைச்சேன்.. கண்ணை மூடிக்க சொன்னேன்.. உடனே ஃபெவி குவிக்கை அவர் முகத்தில் தடவி, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டேன்.. ஆரம்பத்துலயே பெரியவங்க பேச்சை நான் கேக்கல.. இப்போ இந்த அளவுக்கு வந்துடுச்சு" என்று கண்ணீர் மல்க கூறினார் பவித்ரா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications