18 குன்றுகள் மாயம்.. கனிம முறைகேட்டுக்கு இனி செக்!.. செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் காணாமல் போன குன்றுகள் விவகாரத்தில் உரிய புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு, துறை ரீதியாகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது: முதலில் தமிழக மக்கள் மற்றும் முதல்வர் சார்பில் கேரள மக்களுக்கும், தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கும் பண்டிகை நல்வாழ்த்துகள். தமிழகத்தில் சுமார் 18 குன்றுகள் காணாமல் போயுள்ளது குறித்தும், வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு மற்றும் செலுத்தப்பட்ட வரிகளில் பெருமளவிலான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது குறித்தும் புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் பிரபு சட்டப்பேரவையில் விரிவாக விளக்கியுள்ளார்.

18-hills-vanish-in-tamil-nadu-minister-sengottaiyan-promises-new-law-and-strict-action-over-mineral

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அண்டை மாநிலங்களிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கிராவல் மண் மற்றும் மணல் போன்ற கனிம மூலப்பொருட்கள் கொண்டு செல்வதை தற்காலிகமாக நிறுத்திவைத்து சுமார் 20 நாள்களுக்கு முன்பே உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் அடுக்கப்பட்டதால்தான் எதிர்க்கட்சியினர் பதிலளிக்க முடியாமல் மௌனம் காத்தனர். பல சொத்துகள் பினாமி பெயர்களில் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், விரிவான விசாரணைக்குப் பின்னரே முழு விவரங்களும் வெளிவரும். எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையில் இருந்து மாறுபட்ட கொள்கை அடிப்படையில் பலர் பிரிந்து வந்தனர்.

சட்டப்பேரவைப் பதிவேட்டில் இருந்து சில கருத்துகள் நீக்கப்படுவது காலம் காலமாகத் தொடரும் மரபு. நேரலையில் பொதுமக்கள் பார்த்தாலும் பேரவைக் குறிப்பேடுகளில் அதிகாரப்பூர்வமாகப் பதிவாவதே முறையானது. பேரவைத் தலைவர் விதிகளின்படி சிறப்பாகச் சபையை நடத்தி வருகிறார். அரசு நேர்மையான நல்லாட்சியை வழங்கி வருகிறது.

நீக்கப்பட்ட சட்டப்பேரவை உரைகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். பேரவைத் தலைவருடன் ஆலோசித்து இதை முறைப்படுத்தத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேட்டூர் அணை திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ தேதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+