வாக்காளர் அட்டையுடன் ஆதாரை "ஆன்லைனில்" இணைக்கலாம்.. கோவை கலெக்டர் கொடுத்த சூப்பர் விளக்கம்
கோவை: படிவம் 6பியை பயன்படுத்தி வாக்காளர் அட்டையுடன் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். மேலும், ஆன்லைனிலும் விண்ணப்பம் செய்யலாம் என கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை வாக்கு முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதாவது சிலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் உள்ளன. இதை தடுக்கும் வகையிலும் வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் தூய்மையாக்கும் நோக்கத்திலும் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதாவது வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
இதுதொடர்பாக நேற்று சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர்கள் சார்பிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

6பி படிவம் மூலம்..
இதில் மாவட்ட கலெக்டர் சமீரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ''மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும். இதனை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கும் 6பி படிவத்தை பூர்த்தி செய்து மேற்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பம்
இல்லாவிட்டால் www.nvsp.in இணையதளம் மூலம் அல்லது VOTER HELP LINE செயலி மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம். மேலும், தங்களது பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையங்களை அணுகியும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் இல்லாவிட்டாலும்..
மேலும் சிலர் ஆதார் அட்டை இன்றி இருக்கலாம். அப்படி ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை படிவம் 6பியுடன் இணைத்து கொள்ளலாம்'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications