Coimbatore Metro: 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவைக்கு மெட்ரோ ரயில் வரும்! வானதி தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டமானது "அதிமுக ஆட்சி வந்ததும் நிச்சயம் கொண்டு வருவோம்!" என கோயமுத்தூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் ரயில் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாநில அரசு திட்ட அறிக்கையை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

vanathi srinivasan tamil nadu assembly election 2026 admk 2026

மேலும், கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட்டார்.

அறிக்கையில் குறைபாடுகள்

கோவையில் சுமார் 257 சதுர கி.மீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டத்திற்காக, தி.மு.க அரசு சமர்ப்பித்த அறிக்கையில் தவறான தரவுகள் இருந்ததாகவும், திட்டத்திற்கான அடிப்படை ஆய்வுகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

குறிப்பாக, முக்கிய வணிகக் கட்டிடங்களை இடிக்கும் நோக்கில் மாநில அரசு திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பொய்ப் பரப்புரை

டெல்லியில் இருந்து வந்த அறிக்கையின் கடைசி இரண்டு பக்கங்களை மட்டும் வெளியிட்டு, திட்டம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகத் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் 'அரைகுறை செய்திகளைப்' பரப்பி நாடகமாடுவதாக அவர் சாடினார்.

இது கோவையில் தி.மு.க-வுக்குத் தோல்வி அளித்த மக்களைப் பழிவாங்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

வானதி சீனிவாசனின் உறுதிமொழி

"2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு, கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை நிச்சயமாகக் கொண்டு வரப்படும்." என்று அவர் உறுதியளித்தார்.
திட்ட அறிக்கை நிராகரிப்பு குறித்த தெளிவான விளக்கங்களை மாநில அரசு தரவில்லை என்றும், வெறும் அரசியல் பரப்புரையை மட்டுமே செய்து வருவதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என செய்தி வந்தது. ஆனால் இதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது. திட்டத்தை நிராகரிக்கவில்லை. திட்ட அறிக்கையில் சில விளக்கங்களை மத்திய அரசு கேட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் விமர்சித்திருந்தார். அது போல் கோவை, மதுரை மெட்ரோ ரயில் நிலைய பணிக்கான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன் என்பது குறித்தும் விளக்கமளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+