இலவச அரிசி... ரேசன் கடையில் விளக்கம் கொடுத்த அண்ணாமலை... மோடியின் போட்டோவை மாட்டி வைத்தார்
கோவையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேசன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மாட்டி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: ரேசன் கடையில் பிரதமர் மோடியின் போட்டோவை மாட்டி வைத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்றார்.
பின்னர் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோல்டுவின்ஸ் துரைசாமி நகர் பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு மத்திய அரசின் இலவச அரிசி திட்டம் குறித்து பொது மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது ரேசன் கடைக்குள் சென்ற அண்ணாமலைக்கு அக்கட்சியினர் சால்வை அணிவித்தனர்.

ரேசன் கடையில் மோடி போட்டோ
ரேசன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுவரில் தொங்கவிட்டு சென்றார். ஏற்கனவே ரேசன் கடையில் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் போட்டோக்கள் இருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் போட்டோவும் வைக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்ததற்காக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

புது சர்ச்சை
இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்றும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேசன் கடைக்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு
மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் ஊர்களில் ரேசன் பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கலை மனதில் கொண்டு, இந்த திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளார். நாட்டில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மொத்தம் உள்ள 80 கோடி ரேசன் பயனாளிகளில் 77 கோடி பேர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் 19 மாதங்களாக ரேசன் கடைகளில் ஏழைகளுக்கு கூடுதலாக தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.
-
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications