ஒரு தலைமுறை Zombieக்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.. சோசியல் மீடியாவால் அண்ணாமலை ஆதங்கம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: சோசியல் மீடியா மூலமாக ஒரு தலைமுறை Zombie-க்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சோசியல் மீடியா முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அண்ணாமலை, இந்தியாவில் மாணவர்களுக்கு கட்டுப்படுத்த சூழலில் சோசியல் மீடியாவை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, தற்போது வி தி லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலமாக பல்வேறு மாவட்டங்களிலும் மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இதன் மூலமாக இளைஞர்களின் ஆதரவை கைப்பற்ற அண்ணாமலை முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.

Annamalai

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், சோசியல் மீடியா தான் இன்று மிகப்பெரிய ஆபத்து. ஏனென்றால் மெட்டா உள்ளிட்ட பல்வேறு சோசியல் மீடியாக்களின் வருமானத்தில் பங்களிப்பு செய்வதில் இந்தியா தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுதான். அனைவருமே சோசியல் மீடியாவில் ஒரு அக்கவுண்ட் வைத்துள்ளோம்.

சோசியல் மீடியா அல்காரிதம் மூலமாக மக்கள் சோசியல் மீடியாவுக்கு அடிமையாகிவிட்டார்கள். நமக்கு பிடித்த விஷயங்களை சோசியல் மீடியா மொபைலில் கொடுக்கிறது. ஹோட்டல், ஃபிளைட், பேருந்து, வாக்கிங் என்று எங்கு சென்றாலும் மக்கள் கையில் மொபைலுடன் தான் இருக்கின்றனர். அதனால் ஒரு தலைமுறை ஜோம்பிக்களை உருவாக்கி வருகிறோம்.

மாணவர்களுக்கு சோசியல் மீடியா ஒரு கட்டுப்படுத்த சூழலில் தான் கிடைக்க வேண்டும். அதுவும் கூட அமெரிக்கா, ஐரோப்பா நிறுவனம் வாழ இந்திய பயனாளிகள் ஒரு கினியாபிக்கை போல் இருக்க கூடாது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு முன் குழந்தைகளுக்கு சோசியல் மீடியா தடை செய்யப்பட்டுள்ளது. லண்டனில் தடை செய்ய தொடங்கிவிட்டார்கள்.

பல்வேறு நாடுகளில் சோசியல் மீடியாவை முற்றிலும் தடை செய்ய தொடங்கிவிட்டார்கள். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சோசியல் மீடியாவை தடை செய்ய தொடங்க வேண்டும். இது என்னுடைய தொடர் கோரிக்கையாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+