பாட்டியாகி அரசியலுக்கு வந்தால், வாரிசு அரசியல் கிடையாது.. சவுமியாவுக்கு சப்போர்ட்டாக அண்ணாமலை லாஜிக்
கோவை: தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அது எப்படி என்பதற்கான லாஜிக்கையும் அவர் விவரித்துள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார். அவர் பசுமை இயக்கத்திற்காக பணியாற்றியுள்ளார்.
சவுமியா: சவுமியாவிற்கு திருமணமாகி குழந்தை பிறந்த அந்த குழந்தைக்கு திருமணமாகி அவருக்கும் குழந்தை இருக்கும் போது சவுமியா அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என புதிய விதமான விளக்கத்தை அண்ணாமலை அளித்திருந்தார்.
இத்தனை நாட்களாக திமுகவை வாரிசு அரசியல் என அண்ணாமலை விமர்சனம் செய்து வந்தார். எல்லாவற்றுக்கும் மேல் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரும் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் வாரிசு அரசியல் குறித்தே பேசி வருவார்கள்.
திமுகவும் பதிலடி: அந்த வகையில் திமுகவும், பாஜகவுக்கு பதிலளிக்கும் போது ஜெய்ஷா யார் என கேட்டு வருவார்கள். அந்த வகையில் அன்புமணிக்கு பிறகு சவுமியா தேர்தல் அரசியலில் வந்திருப்பது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. "ஏன் உங்கள் கூட்டணி கட்சியில் மட்டும் வாரிசு அரசியல் இல்லையா" என்றெல்லாம் அண்ணாமலைக்கு கேள்விகள் வந்து விழுகின்றன.
அது மட்டுமல்லாமல் தருமபுரிக்கு ஏற்கெனவே வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக கேட்டுக் கொண்டதற்கிணங்க சவுமியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை வைத்தும் வாரிசு அரசியலை ஏன் ஊக்குவித்தீர்கள் என்ற கேள்வி அண்ணாமலை முன்பு வருகிறது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாகவே அண்ணாமலை சவுமியா விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கோவை லோக்சபா தொகுதி: கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசுகையில், கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப் பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது. ஒதுங்கி இருந்தவர்கள் கூட அரசியல் மாற்றம் வேண்டும் என வெளியே வருகிறார்கள். வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது கோவை ஒரு புரட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். 39 தொகுதிகளிலும் கூட என்டிஏ கூட்டணி வெல்லும் என்பதை களத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அரசியலில் திமுக இருப்பதே ஒரு அவமானம், திமுக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர ஆரம்பித்ததோ. அப்போது இருந்தே விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, வாக்குக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது. இதனால்தான் தந்தை பெரியார், திமுகவை எதிர்த்தார்.
பொம்மை முதல்வர்: தனக்கென்று அடையாளம் எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இவருக்கு பிரதமர் மோடியை பற்றி பேச தகுதியே இல்லை. கோவையின் வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது. என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே என்னுடைய பேச்சுதான். என் மீது ரூ 1230 கோடி மான நஷ்ட வழக்கு போட்டுள்ளனர். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications