மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
கோவை: கேரளாவைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் அஸ்வினி அஷ் கடந்த சில நாட்களாகவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் சப்ஸ்க்ரிப்ஷன் முறை மூலம் பிரத்யேகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வரும் அஸ்வினி அஷ், அதன் மூலம் மாதம் சுமார் 1.2 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக வெளியாகி உள்ள தகவல் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் அஸ்வினி அஷ் தான் தற்போது இணையதளங்களில் இதுதான் மிகப்பெரிய "டாக் ஆஃப் தி டவுன்". ஒரு புகைப்படம் அல்லது வீடியாவிற்கு பணம் கொட்டுகிறது என்றும் கோடிகளில் சம்பாதிக்கிறார் என்றும் குமுறுகிறார்கள் நெட்டிசன்கள்.. மாதம் முழுக்க வேலை செய்தாலும் 25000 சம்பாதிக்க முடியவில்லை என்றும், சர்வ சாதாரணமாக ஒரு கோடி சம்பாதிக்கிறாரே, பேசாமல் நாமும் பெண்ணாக பிறந்திருக்கலாம் என்றும் சிலர் குமுறுகிறார்கள். இப்படி பலரும் அஸ்வினி அஷ் பற்றி பேசி வருகிறார்கள்.

ஆனால் ஒரு கோடி சம்பாதிக்கிறார் என்பது வல் அதிகாரப்பூர்வமான வருமான வரித் தாக்கல் கணக்கு கிடையாது, நெட்டிசன்களின் கணக்குப்படி தான் இருக்கிறது. அவர்களின் கணக்கு உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெல் இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 1.2 மில்லியன் (12 லட்சம்) ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Exclusive Subscription' முறையை வைத்திருக்கிறார்.
இதன் மூலம் இவரது பிரத்யேக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்க்க ஒருவர் மாதம் சுமார் ₹449 கட்டணம் செலுத்த வேண்டும். இவரது மொத்த ஃபாலோயர்களில் வெறும் 2% முதல் 3% பேர் (சுமார் 25,000 முதல் 30,000 பேர்) சந்தாதாரர்களாக சேர்ந்தாலே, மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வந்துவிடும். அப்படித்தான் சேர்ந்துள்ளார்கள்.
இவர் சம்பாதிக்கு முறையை தான் பலரும் கேள்வி எழுப்பி விவாதம் செய்கிறார்கள் இவர் பதிவிடும் கன்டென்ட் சாதாரணமான புகைப்படங்கள் முதல் சற்றே கிளாமரான புகைப்படங்கள் வரை இருக்கிறது. அஸ்வினி அஷ் அண்மையில் நைட்டி அணிந்து கார் கழுவும் வீடியோ ஒன்று செம வைரலானது.இந்த வீடியோவை காட்டித்தான் கோடிகளில் சம்பாதிப்பதாக கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.
கடினமாக உழைக்கும் பலருக்குக் கிடைக்காத வருமானம், வெறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவருக்குக் கிடைப்பது பலரையும் ஆச்சரியத்திலும், சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.
அஸ்வினி அஷ் மட்டுமல்ல தெலுங்கு பிக் பாஸ் பிரபலம் விஷ்ணுப்ரியா மற்றும் நடிகை கிரண் போன்றோரும் இது போன்ற சப்ஸ்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். "பணம் சம்பாதிக்க இது ஒரு புதிய வழி" என்று ஒரு தரப்பினரும், "இது இளைய தலைமுறையைத் தவறாக வழிநடத்துகிறது" என்று மற்றொரு தரப்பினரும் விவாதிக்கிறார்கள். மொத்தத்தில், டிஜிட்டல் உலகில் ஒருவருக்கு இருக்கும் 'ஃபாலோயர்கள்' எண்ணிக்கையை எப்படிப் பணமாக மாற்றலாம் என்பதற்கு அஸ்வினி அஷ் ஒரு பெரிய உதாரணமாக மாறி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications