ஊழலே இல்லையா? ’அவரை’ ஏன் மாத்துனீங்க! முடிஞ்சா கேஸ் போடுங்க செந்தில் பாலாஜி! அதிரடி அண்ணாமலை..!

Subscribe to Oneindia Tamil

கோவை : தமிழக அரசு அவசர அவசரமாக துறை செயலாளர்களை மாற்றுகிறது எனவும், ஊழல் நடக்கவில்லை எனில் சுகாதாரத்துறை செயலாளரை ஏன் மாற்ற வேண்டும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    தவறான தகவல்களை கூறுகிறேன் என்றால் அமைச்சர் என் மீது வழக்கு தொடரப்படும்- அண்ணாமலை

    தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக மற்றும் தமிழக அரசையும், அமைச்சர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை வெளியிட்டார். ஆனால் திமுக அதனை திட்டவட்டமாக மறுத்த நிலையில், அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    முறைகேடு பட்டியல்

    முறைகேடு பட்டியல்

    இந்நிலையில் கர்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்புக்கான ஒப்பந்தம் பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனத்துக்கு தமிழக அரசு தந்துள்ளது. குறிப்பாக ஊழல் நடந்திருப்பதாக அண்ணாமலை புகார் கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் தரப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக துறை செயலாளர்களை மாற்றுகிறது எனவும், ஊழல் நடக்கவில்லை எனில் சுகாதாரத்துறை செயலாளரை ஏன் மாற்ற வேண்டும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாஜக அண்ணாமலை

    பாஜக அண்ணாமலை

    கோவை பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "இனி மாதந்தோறும் திமுக அமைச்சர்கள் பற்றிய ஊழல் பட்டியல் வெளியிடப்படும். இதுவரை நியூட்ரிசன் கிட் டெண்டரை ஏன் திறக்காமல் இருக்கிறார்கள் என்பதற்கு அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசு அவசர அவசரமாக துறை செயலாளர்களை மாற்றுகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுவதைவிட அமைச்சர்களை மாற்றலாம். அப்படிச் செய்தாலாவது ஏதாவது பலன் கிடைக்கும்

    வழக்கு தொடரட்டும்

    வழக்கு தொடரட்டும்

    தமிழக அரசு குறித்து நான் கூறும் தகவல்கள் பொய்யெனில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி என் மீது வழக்கு தொடரட்டும் எனவும் அதனை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார். திமுக அமைச்சர்கள் பேசுவது அடுப்புக்கரி சட்டியை பார்த்து நீ கருப்பாக உள்ளாய் என்று சொல்வது போல் உள்ளது. மேலும் மாதம் மாதம் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். ஊழலை தடுப்பதற்கு அதிகாரிகளை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை எனவும் முதல்வர்தான் ஊழல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

    திமுகவினரின் ஊழல்

    திமுகவினரின் ஊழல்

    திமுகவினர் அனைவரும் அனைவருக்கும் தெரியும்படி ஊழல்கள் செய்கின்றனர். நியூட்ரிசன் கிட் டெண்டர் இதுவரை திறக்கப்படவில்லை . இது குறித்து சமீப காலங்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் காவல் நிலையத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இது குறித்து தமிழக முதல்வர் தான் விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர டிஜிபி உள்ளிட்ட காவல்துறையினர் விளக்கமளிப்பது போதாது" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+