கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் 16 எம்.பி கள் ஆய்வு - டி.ஆர் பாலு பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது - வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

கோவை : கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்பிக்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், டி.ஆர் பாலு எம்.பி இந்த ஆய்வுக்கு வராதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

Recommended Video

    TR Balu வராதது ஏமாற்றமாக உள்ளது - வானதி சீனிவாசன் வருத்தம் | கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு

    கோவை ரயில் நிலையத்தில், இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,களும் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள். ரயில் நிலையத்தில் உள்ள கைத்தறி ஆடைகளையும் பார்வையிட்டனர்.

     BJP MLA Vanathi Srinivasan slams DMKs TR Balu

    இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியவதாவது : ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,க்கள் நேற்று கோவை வந்து, இன்று கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ரயில்வே அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். ஒன் ஸ்டேஷன் ஒன் பிராடக்ட் பிரதம மந்திரியின் திட்டம் எப்படி செயல்படுகிறது என நேரடியாக ஆய்வு செய்தனர்.

    வந்தே மாதரம் பேரணி.. பாரம்பரிய உடை அணிந்து படுகர் இன மக்களுடன் நடனமாடிய வானதி சீனிவாசன்! வந்தே மாதரம் பேரணி.. பாரம்பரிய உடை அணிந்து படுகர் இன மக்களுடன் நடனமாடிய வானதி சீனிவாசன்!

    ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பொருள்களுக்காக ரயில்வே துறை அவர்களின் பொருட்களை மிக குறைந்த வாடகையில் இங்கு கடை போட்டு விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

    குறிப்பாக, தென் தமிழகத்திற்கு திருச்செந்தூர் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு கோவையிலிருந்து ரயில்வே சேவையை தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம். வடகோவை ரயில் நிலையத்தை இன்னும் சீரமைத்து, கோவை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தை குறைக்க, வடகோவையில் பயணிகள் ஏறி இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.

    கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயாரித்து வருகிறது. அதனால் பக்கத்தில் உள்ள நிலங்களை எடுப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள். நமக்கு தேவைப்படக்கூடிய நிலம் கிடைத்தால் உலகத்தரம் வாய்ந்த காந்தி நகர் ரயில் நிலையம் போல, கோவை ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யக்கூடிய ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது.

    நான் இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச உள்ளேன். இந்தக் குழுவில் டி.ஆர். பாலு உள்ளார். ஆனால் அவரை இங்கு பார்க்கவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா என தெரியவில்லை. இங்கு வந்துள்ள எம்பிக்கள் அனைவரும் ஒடிசா, ராஜஸ்தான், குஜராத் , உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். அவங்களுக்கு தற்போது மொழி பிரச்சனை இருந்தது. தமிழ்நாட்டின் எம்.பி இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். டி.ஆர் பாலு எம்.பி வராதது ஏமாற்றமாக உள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    English summary
    Vanathi Srinivasan said it was disappointing that TR Baalu MP did not participate in the inspection of Coimbatore MPs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X