கோவை கார் வெடிப்பு வழக்கை என்ஐஏக்கு மாத்துங்க.. “சமரசம் கூடாது” முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி வார்னிங்
கோவை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வித சமரசத்திற்கும் தி.மு.க அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது, இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபீன் என்பவர் பலியானார். முதலில் இச்சம்பவம் விபத்து எனக் கருதப்பட்ட நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரியுள்ளார்.

வானதி சீனிவாசன்
இதுகுறித்து பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், கோவை கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறி சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காரில் இருந்த ஜமேசா முபின் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜமேசா முபின் வீட்டில், காவல்துறை நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான அம்மோனியம் நைட்ரேட், பேட்டரி, இரும்பு ஆணிகள் உளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் இலக்கு - கோவை?
ஜமேசா முபினை, ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என, கோவை 25 ஆண்டுகளுக்கு, பயங்கரவாதிகளின் இலக்காக இருந்த மாநகரம் கோவை. கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அதில் காயமடைந்தவர்களின் இன்னமும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். பெங்களூர், ஐதராபாத், புனே போல பெரிய அளவில் தகவல் தொழில்நுட்ப நகரமாக வளர்ந்திருக்க வேண்டிய கோவை மாநகரின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஒத்திகையா?
எனவே, இந்த கார் வெடிப்பு சம்பவத்தை, சிலிண்டர் வெடிப்பு என, சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது. இது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையா? தீபாவளி கொண்டாடங்களை சீர்குலைக்க நடந்த சதியா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று, சம்பவம் நடந்த, அக்டோபர் 23-ஆம் தேதியே அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது.

முதல்வர் மௌனம் ஏன்
காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின், நடந்த சம்பவத்திற்கு கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும். 1998 போல நடந்து விடுமோ, கோவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று நாட்களும் மெளனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.

விலை கொடுக்க வேண்டியிருக்கும்
கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால், இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில், எவ்வித சமரசத்திற்கு தி.மு.க. அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications