அடேங்கப்பா.. வருமானத்திற்கு அதிகமாக 3,928% சொத்துக்களா? எஸ்.பி.வேலுமணியிடம் துருவி துருவி விசாரணை..!
கோவை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அதாவது 3928 % சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.பி.வேலுமணியிடம் சொத்து சேர்த்தது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புள்ள நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய வழக்குகள்
புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணி,அவரது சகோதரர் அன்பரசன்,உறவினர் சந்திரசேகர் உள்ளிட்ட 13 பேருக்கு சொந்தமான 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் சேர்த்து மேலும் 13 பேர் மீதும் இதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

3928 சதவீதம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அதாவது 3928 % சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.பி.வேலுமணியிடம் சொத்து சேர்த்தது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு
அதாவது தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் படி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் 2021 மார்ச் மாதம் 15ஆம் தேதி வரையிலான காலகட்டங்களில் மட்டும் எஸ்.பி.வேலுமணி அவரது வருமானத்தை விட 58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவரது வருமானத்தை விட 3928 சதவீதம் அதிகமாகும்.
வெளிநாடுகளில் சொத்துகள்
மேலும் எஸ்பி வேலுமணியின் வீட்டில் வைத்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ப் குறிப்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எஸ்.பி.வேலுமணி சொத்துக்களை வாங்கி உள்ளாரா என்றும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மகன் மனைவி உள்ளிட்டோர் பெயரிலும் வெளிநாடுகளில் பணம் மற்றும் சொத்துக்கள் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications