கோவை கார் வெடிப்பு.. கைதானவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை.. சிறையில் தீட்டிய சதி?
கோவை: கோவையில் கார் வெடித்த வழக்கில் கைதான 5 பேரிடம் 3வது நாளாக போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வருகிறது. 5 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில் மேலும் சிலரது வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி மாருதி கார் வெடித்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பயங்கரவாதி சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் கோவையில் முகாமிட்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் காரில் இருந்த தடயங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

ஜமேஷா முபின்
இதில் கார் வெடிப்பில் பலியானது கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற பழைய துணி வியாபாரி என்பது தெரியவந்தது. மேலும் காரில் இரும்பு ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கே வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தன.

சிசிடிவி காட்சிகள்
கார் வெடிப்பதற்கு முந்தைய இரவில் சிலர் காரில் வெடி பொருட்களை ஏற்றுவது போல் வெளியான சிசிடிவி காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கோவை மாநகரின் முக்கிய இடங்களில் குண்டு வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
உபா சட்டம் பாய்ந்தது
இதனைத்தொடர்ந்து உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது தல்கர், முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா) பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

6வது நபர் கைது
இவர்களை கடந்த 26ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று 6வதாக வின்சென்ட் ரோட்டை சேர்ந்த அப்சர்கான் என்பவர் உபா சட்டத்தில் செய்யப்பட்டார். கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் சகோதரர் முறை உறவினரான அப்சர்கான் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துள்ளார்.

காவல்துறை விசாரணை
இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் வெடிகுண்டு தயார் செய்வதற்கான ரசாயன பொருட்களை கொள்முதல் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி செயல்படுத்தி வந்துள்ளார். வெடி பொருட்களை மொத்தமாக வாங்கினால் சந்தேகம் ஏற்படும் என்பதால் வெவ்வேறு நபர்கள் வாயிலாக சிறிது சிறிதாக வாங்கி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே காவல் விசாரணையில் 5 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போலீசார் ஆன்லைன் தளங்களில் குறிப்பிட்ட இந்த ரசாயன பொருட்களை வாங்கிய நபர்களின் பட்டியலை சேகரித்து வருகின்றனர்.

கேரளா சிறையில் சதித்திட்டம்
கோவை கார் வெடித்த வழக்கில் கைதான 5 பேரிடமும் போலீசார் 3வது நாளாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் தயாரித்தது எப்படி, அதற்கு திட்டம் தீட்டியது யார்?, இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் யார்?, என கேள்விகளை கேட்டு வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர். கோவையில் கடந்த 2019ம் ஆண்டு என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சிலரை கைது செய்தனர். அவர்கள் கேரள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை கோவையில் தற்போது கைதான 5 பேரில் சிலர் அடிக்கடி கேரள சிறைக்கு சென்று சந்தித்து வந்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது அவர்கள் சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு ஆலோசனை பெறவே அவர்கள் சிறைக்கு சென்று சந்தித்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தித்தது ஏன்?
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரோஸ் ஏற்கனவே கேரளா சிறையில் உள்ளவர்களை சந்தித்து பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளாவில் சிறையில் உள்ள ரசித் அலி மற்றும் முகமது அசாருதீன் போன்றோரை பெரோஸ் சந்தித்து உள்ளார். இதில் அசாருதீன் என்பவர் 2019ல் இலங்கை தேவாலயத் தாக்குதலுக்கு காரணமான அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும் சிறையில் அவர்களுடனான சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என பெரோஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
இதற்கிடையே தமிழக அரசு பரிந்துரையின் பேரில், கார் வெடித்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை செயலகம் உத்தரவிட்டது. இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை கோவை மாநகர போலீசார், என்ஐஏ டிஐஜி வந்தனா, எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதானவர்களிடம் நடத்தப்பட்டு வரும் காவல் விசாரணையின் முடிவில் என்ஐஏ அதிகாரிகளின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் எனவும், அதன்பேரில், சிலரது வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications