ஸ்கூட்டரில் காதலன்.. பக்கத்தில் காதலி.. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்படியா? அதிர்ந்த கோவை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை காதலனுக்காக கொள்ளைக்காரியாக மாறிவிட்டார் காதலி.. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை, இந்த பெண்ணை தவறான பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது.. கோவையில் இந்த கல்லூரி மாணவனும், மாணவியும் சிக்கி, எதிர்காலத்தையே இழக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். என்ன நடந்தது போத்தனூரில்?

கோவை போத்தனூர் அருகே வெள்ளலூரை சேர்ந்தவர் சரஸ்வதி.. 70 வயதாகிறது.. இவர் கடந்த 30ம் தேதி வீட்டின் முன்பு உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த இளைஞர், திடீரென சரஸ்வதி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு, அங்கு தயாராக ஸ்கூட்டரில் இருந்த இளம்பெண்ணுடன் ஸ்கூட்டரில் தப்பினார்.

Coimbatore College Couple

கோவை ஜோடி

ஸ்கூட்டரில் வந்த நபர் மாஸ்க் அணிந்திருந்தார்... கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை பறிகொடுத்த சரஸ்வதி பாட்டி அலறினார். இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை போலீசார், மர்ம நபர்களை தேடினர்.

சிசிடிவி கேமராவில் சிக்கிய ஸ்கூட்டர் நம்பரை வைத்து விசாரித்தபோது, திருப்பூரை சேர்ந்த பரணிதரன் (21) மற்றும் அவரது காதலியான நெல்லையை சேர்ந்த சிந்து (21) என்பதும், 2 பேரும் கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.ஏ ஒன்றாக படித்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

சரஸ்வதி பாட்டி

உடனடியாக விசாரணையும் ஆரம்பமானது.... தனது காதலன் பரணிதரனுக்கு நண்பர்களிடம் வாங்கிய கடன் உள்ளதாம். அந்த கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி காதலனுக்கு தந்து ஆடம்பரமாக வாழவும்தான், நகையை பறிக்க பெண் திட்டமிட்டாராம் சிந்து.. அப்படித்தான் சரஸ்வதியிடம் நகையை பறித்துள்ளனர்..

சம்பவம் நடந்தபோது, கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த பரணிதரன், பல் டாக்டர் எப்போது வருவார்? கிளினிக் எப்போது திறப்பார்கள்? என்று சரஸ்வதி பாட்டியிடம் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார். பிறகு டாக்டரின் வீடு எங்கே இருக்கு என்றும் கேட்டுள்ளார்..

சரஸ்வதி பாட்டியோ, உடனே பல் டாக்டரின் வீட்டுக்கு வழி காட்டியிருக்கிறார்.. அந்த நேரத்தில்தான், திடீரென சரஸ்வதியின் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி செயினை பறித்துள்ளார்.. இதில் சரஸ்வதி நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்..

ஸ்கூட்டரில் காதலி

அங்கிருந்தவர்கள் பரணிதரணை பிடிக்க முயற்சித்தபோது, பக்கத்திலேயே ஸ்கூட்டரில் உட்கார்ந்திருந்த சிந்துவுடன் தப்பி சென்றிருக்கிறார்.. இப்போது இருவரிடமிருந்தும் 2 செல்போன்கள், முகத்தை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற மாஸ்க், ஸ்கூட்டரின் எண்ணை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சரஸ்வதி பாட்டியின் 4 பவுன் தங்கச்செயின் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல்முறை குற்றம்

இதுகுறித்து கோவை தெற்குபகுதி காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் சொல்லும்போது, நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரும், நிகழ்வு நடைபெற்ற 24 மணி நேரத்துக்குக்குள், கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க கண்காணிப்பு கேமரா மிகவும் உதவியது. கைதான மாணவனும், மாணவியும் ஒருவரை ஒருவர் விரும்பியிருககிறார்கள்..

மாணவன் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி மாணவிக்கு ஆடம்பரமாக செலவழித்துள்ளார். அந்த கடனை அடைக்கவும், புதிதாக கார் வாங்கி சொகுசாக சுற்றவும் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முதல்முறையாக இப்படி குற்றச்செயலில் ஈடுபட்டபோது சிக்கிக்கொண்டனர் என்றார்.

காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கவும் கல்லூரி மாணவி கொள்ளைக்காரியாக மாறிய சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+