கோவை கனமழை எச்சரிக்கை: ஊட்டி, வால்பாறை செல்ல 3 நாட்களுக்கு தடை.. இரவு நேர போக்குவரத்தும் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மிக கன மழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கோவை - நீலகிரி, வால்பாறை பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மலைப் பாதைகளில் நிலச்சரிவு, மரங்கள் விழுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய வாகனங்களைத் தவிர மற்ற வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று (23.10.2026) இரவு முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிககனமழை பெய்து வருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதால் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

coimbatore-heavy-rain-alert-avoid-ooty-and-valparai-trips-for-3-days-night-travel-ban-announced

முன்னெச்சரிக்கை அவசியம்

மேலும், மிக கன மழை பெய்யும் என முன்னறிவிப்பு உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும் வரை கோயம்புத்தூர் - நீலகிரி, வால்பாறை செல்வதற்கு வருகை புரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல்வேறு இடங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக உதகமண்டலம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பொதுமக்கள் மலைப்பாதைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஓடைகள், அணைகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்.

வெள்ளம் சூழ்ந்த சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து விலகி இருங்கள். நிலச்சரிவுகள், மரங்கள் விழுதல், பாறைகள் சரிதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புடன் இருங்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளை பின்பற்றவும். மேலும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அடுத்த 3 நாட்கள்

அத்தியாவசிய தேவையை தவிர பொதுமக்கள் பொது இடங்களுக்கு மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மழை குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு விழிப்புடன் இருக்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின் அடியில் நிறுத்தக்கூடாது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் மழைபெய்யும் போது. மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை தொட வேண்டாம்.

நீலகிரி, வால்பாறை போக்குவரத்து

அடுத்த மூன்று நாட்களுக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு. TNSTC சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்கு மாலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0422-2306051-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறே மாநகராட்சி, நகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு மைய உதவி எண்கள்

ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி :0422-2302323 (வாட்சப் எண்:81900-00200)

* கோயம்புத்தூர் வடக்கு மண்டலம் : 89259-75980

* கோயம்புத்தூர் தெற்கு மண்டலம் :90430-66114

* கோயம்புத்தூர் மத்திய மண்டலம் : 89259-75982

* கோயம்புத்தூர் மேற்கு மண்டலம் : 89259-75981

* கோயம்புத்தூர் கிழக்கு மண்டலம் : 89258-40945

* நகராட்சி, வால்பாறை : 04253-222122

* நகராட்சி, பொள்ளாச்சி:-04259-220999

* நகராட்சி, மேட்டுப்பாளையம் :-04254-222151

* நகராட்சி, மதுக்கரை :-0422-2511815

* நகராட்சி, கூடலூர் : 0422-2692402

* நகராட்சி, கருமத்தம்பட்டி : 0421-2333070

* நகராட்சி, காரமடை : 04254-272315

* சார் ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி:04259-224855

* வருவாய் கோட்டம், கோயம்புத்தூர் வடக்கு : 0422-2444450

* வருவாய் கோட்டம். கோயம்புத்தூர் தெற்கு: 0422-2300424

* வட்டாட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் வடக்கு :- 0422 2214225

* வட்டாட்சியர் அலுவலகம், அன்னூர்:- 04254-262260

* வட்டாட்சியர் அலுவலகம், மேட்டுப்பாளையம்:- 04254-222153

* வட்டாட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் தெற்கு:-0422-2247831

* வட்டாட்சியர் அலுவலகம், சூலூர்:-0422-2681000

* வட்டாட்சியர் அலுவலகம், பேரூர்:-0422-2606030

* வட்டாட்சியர் அலுவலகம், மதுக்கரை:-0422-2622338

* வட்டாட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி:-04259-226625

* வட்டாட்சியர் அலுவலகம், கிணத்துக்கடவு:-04259-241000

* வட்டாட்சியர் அலுவலகம், ஆனைமலை:-04253-222305

* வட்டாட்சியர் அலுவலகம், வால்பாறை:-04253-281100

மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+