கோவையில் தனியார் மனமகிழ் மன்ற மதுபான உரிமம் ரத்து.. கமிஷனர் கண்ணன் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியார் மனமகிழ் மன்ற மதுபான (எப்.எல்.2) உரிமையாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவையில் விதிமுறைகளை மீறும் தனியார் மனமகிழ் மன்ற மதுபான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்து உள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தனியார் மனமகிழ் மன்ற மதுபான (எப்.எல்.2) உரிமையாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசுகையில், கோவையில் எப்.எல்.2 மதுபானக்கூடங்களை நடத்தி வருபவர்கள் அரசு விதிமுறைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Coimbatore Police Commissioner Liquor licenses of private clubs violating rules will be cancelled

மனமகிழ் மன்றத்தின் உறுப்பினர்கள் பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதேபோல் பாரில் வருகைப்பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். 21 வயதுக்குட்பட்ட நபர்களை எக்காரணம் கொண்டும் மதுபானக்கூடத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. வருகை தரும் நபர்களின் அடையாள விவரங்கள், குறிப்பாக ஆதார் விவரங்கள், விதிமுறைகளின்படி முறையாக பதிவு செய்து பராமரிக்கப்பட வேண்டும்.

வெளிமாநில மதுபானங்கள் அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். மதுபான கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக தகவல் கிடைத்தால், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தனியார் மனமகிழ் மன்ற மதுக்கூடங்களில் விதிமீறல்கள் அல்லது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றத்தின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு கமிஷனர் கண்ணன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 863 மனமகிழ்மன்றங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவை சென்னையில் பெரும்பாலும் கிடையாது. ஆனால் கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் இருக்கிறது. டாஸ்மாக்கை விடவும் அதிக நேரத்தில், அதாவது காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த தனியார் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் நடைமுறையில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. எனினும் ஆதார் அட்டையுடன் சென்று 21 வயது நிறைவு பெற்றவர்கள் எளிதாக உறுப்பினர் ஆக முடியும் என்கிற நிலையும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+